அமராவதி: பாலியல் புகாரில் சிக்கிய திரைப்பட நடன இயக்குநர் ஷேக் ஜானி பாஷா எனப்படும் ஜானி மாஸ்டருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குநராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் ரஜினி, விஜய், தனுஷ் மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜூன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர் ஜானி மாஸ்டர்.

இந்நிலையில் ஜானி மாஸ்டர் மீது 21 வயது நிரம்பிய அவரது உதவி நடன பெண் கலைஞர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். கடந்த 2019 ஆண்டு முதல் ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்புக்கு சென்ற இடங்களில் எல்லாம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார். மேலும், 21 வயதாகும் தன்னை 16 வயதில் இருந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதற்கு அவரது மனைவியும் உடந்தை என்று புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஆந்திர போலீசார் மாஸ்டர் ஜானியை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஜானியை பெங்களூரு போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார். தெங்கானா மாநிலம் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஜானி மாஸ்டரை சஞ்சல்குடா சிறையில் 15 நாள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}