சென்னை: தீபாவளி வந்தாச்சு.. நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னையிலிருந்து பல லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுப் போயுள்ளனர். இதனால் தலைநகர் சென்னை வழக்கம் போல வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. மழை குறுக்கீடு இருந்தாலும் கூட மக்கள் ஆரவாரமாக கடைசி நேர பர்ச்சேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அனைத்து வணிகப் பகுதிகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக தி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அனைத்துக் கடைகளிலும் கடைசி நேர பர்ச்சேஸ் தீயாக நடந்து கொண்டுள்ளது.
பட்டாசு விற்பனையும் தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பசுமை பட்டாசுகளை பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையிலிருந்து தெற்கு மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக பண்டிகையைக் கொண்டாட கிளம்பிப் போயுள்ளனர். கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்களை அரசு இயக்கி வருகிறது. அதேபோல சிறப்பு ரயில்களும் விடப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைத்துமே நிரம்பி வழிகின்றன.
சென்னையிலிருந்து பல லட்சம் கிளம்பிப் போயிருப்பதால் நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. முக்கியச் சாலைகளில் கூட்டமே இல்லை. வழக்கமான கூட்டம் இல்லாததால் டிராபிக் எளிதாக இருக்கிறது.
சென்னை மட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலுமே தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. வணிகப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}