சென்னை : வழக்கமாக வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக சிறப்பு ரயில்கள், பஸ்கள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் மாதம் 20 ம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் ஆகஸ்ட் 17ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற முறையை ரயில்வே நிர்வாகம் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் அக்டோபர் மாதம் வரும் தீபாவளி பண்டிகைக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்றால் அதற்கான முன்பதிவு ஆகஸ்ட் மாதம், அதாவது இந்த மாதம் துவங்க உள்ளது.
சொந்த ஊர் செல்லும் மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதிகளை மறக்காமல் தெரிந்து கொண்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது சிறப்பு. ஆகஸ்ட் மாதம் எந்த தேதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது என்ற விபரத்தை தெரிந்து கொள்வோமா..
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதி :
- ஆகஸ்ட் 17 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 16 முதல் முன்பதிவு தொடங்கும்
- ஆகஸ்ட் 18 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 17
- ஆகஸ்ட் 19 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 18
- ஆகஸ்ட் 20 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 19
- ஆகஸ்ட் 21 ம் தேதி (தீபாவளி நாள்) சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 20
- ஆகஸ்ட் 22 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 21
- ஆகஸ்ட் 23 ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அக்டோபர் 22
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும். வட இந்திய ரயில் பட்டியல் மற்றும் முன்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில்வே கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலே குறிப்பிட்ட தேதிகளில் காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவும் துவங்கும். முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும். அதே போல் தீபாவளி முடிந்த மீண்டும் ஊர் திரும்பும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவும் அடுத்தடுத்த தேதிகளில் துவங்கும். இதனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்த தேதிகளை குறித்து வைத்துக் கொண்டு தீபாவளி பயணத்திற்கான ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை இந்த ரெகுலர் ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் கவலைப்படாதீங்க. ரயில்வே துறை சிறப்பு ரயில்களையும் அறிவிக்கும். அதை மிஸ் பண்ணாம புக் பண்ணிடுங்க. ஒரு வேளை அதிலும் மிஸ் ஆகி விட்டால் இருக்கவே இருக்கிறது தமிழ்நாடு அரசுப் பேருந்து. அதில் புக் பண்ணி சொந்த ஊருக்குப் போய் தடபுடலாக பண்டிகையைக் கொண்டாடிட்டு வாங்க.
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
பாசத்தின் வாசம் (குறுங்கதை)
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!
கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!
{{comments.comment}}