சென்னை : தீபத் திருநாளான தீபாவளி கொண்டாடத்திற்குரிய நாளாகவும், முக்கிய விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடுவதாகவும், ராவணனை வதம் செய்த பிறகு தங்களின் வனவாசம் முடிந்த ராமர், சீதை மற்றும் லட்சுமணருடன் அயோத்திக்கு திரும்பியதை கொண்டாடும் நாளே தீபாவளி என்றும் புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும் இது தீமைகள் அழிந்து, நன்மைகள் துவங்குவதற்கான நாளாக தீபாவளி திருநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி திருநாள் உலகின் பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் தென் மாநிலங்களில் ஒரே நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி, லட்சுமி தேவியை வரவேற்கும் நாளாகவும், கேதார கெளரி விரதம் கொண்டாடும் நாளாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி திருநாள் அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
தீபாவளித் திருநாளை கங்கா ஸ்நானத்துடன் துவங்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதாவது, தீபாவளித் திருநாளன்று அதிகாலை 3 முதல் 05.30 மணி வரையிலான நேரத்திற்குள் ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளி நமக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம். அந்த வகையில் நல்லெண்ணெயில் மகாலட்சுமியும், வெது வெதுப்பான நீரில் கங்கா தேவியும், சீயக்காயில் சரஸ்வதி தேவியும், புத்தாடையில் மகா விஷ்ணுவும், இனிப்பில் அமிர்தமும், பட்டாசு பொறியில் ஜீவாத்மாவும், லேகியத்தில் தன்வந்திரி பகவானும் எழுந்தருளுவதாக ஐதீகம்.
தீபாவளி அன்று அதிகாலை 03.30 மணி துவங்கி 05.30 மணி வரையிலான நேரம் எண்ணெய் வைத்து குளிப்பதற்கான நேரமாகும். நல்லெண்ணை அப்படியே தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் தேய்த்துக் கொள்ளலாம். காய்ச்சி தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான அளவு எண்ணெய்யை எடுத்து இரும்பு கடாயில் லேசாக சூடேறும் வரை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். அதோடு சிறிது மிளகு, சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு தட்டி போட்டு இறக்கி, சூடு ஆறிய பிறகு வடிகட்டி, அந்த எண்ணெய் மற்றும் சீயக்காயை பூஜை அறையில் வைத்து வேண்டிக் கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்துடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, முதலில் தெய்வத்தையும், பிறகு பூமா தேவியையும் வேண்டிக் கொள்ள வேண்டும். தரையில் மூன்று சொட்டு நல்லெண்ணெய் மற்றும் சீயக்காய் வைத்து, அதை அப்படியே கைகளில் வழித்து தலையில் கீழிருந்து மேலாக மூன்று முறை தேய்க்க வேண்டும். உடல் முழுவதும் தேய்த்தோ அல்லது தலைக்கு மட்டுமோ தேய்த்தோ அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும். குளித்து விட்டு புத்தாண்டை உடுத்தி, பட்டாசு வெடித்து, 6 மணிக்கு முன்பாக சிறிதளவு இனிப்பு சாப்பிட்டு விட வேண்டும். இதுவே பாரம்பரிய முறையில் எண்ணெய் தேய்த்து குளித்து, தீபாவளி கொண்டாடும் முறையாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா?.. நாகை கூட்டத்தில்.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!
முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!
2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?
திருச்சியில் எம்ஜிஆர்.. நாகையில் அண்ணா.. திராவிட சென்டிமென்டை கையில் எடுக்கும் விஜய்!
{{comments.comment}}