சென்னை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் நடந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இனிமேல் இதுபோல நடக்காத படி பார்த்துக் கொள்ளப்படும். தாக்குதல் நடத்திய இளைஞர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிண்டி மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜியை விக்னேஷ்வரன் என்ற இளைஞர் இன்று சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்கு விரைந்து வந்தார்.
டாக்டர் பாலாஜியை அவர் நேரில் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, கடந்த 6 மாதமாக விக்னேஷ்வரன் தனது தாயாருக்கு சிகிச்சை அளிக்கு இங்கு வந்துள்ளார். அவர் மீது அப்போதெல்லாம் எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால் தனது தாயாருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அங்கு அவர்கள் சொன்னதை வைத்துக் கொண்டு தவறாகப் புரிந்து கொண்டு இந்த முடிவை எடுத்து விட்டார்.
அவரது செயல் கடும் கண்டனத்துக்குரியது. காவல்துறையினர் உடனடியாக அவரைக் கைது செய்து விட்டனர். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாதபடிக்கு பார்த்துக் கொள்ளப்படும். அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்ட அரசு இது. அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்படும்.
டாக்டர் பாலாஜியின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் உடன் இருக்கிறார்கள். அவரது மனைவியும் வந்துள்ளார். அவரும் டாக்டர்தான். அனைத்து சிறப்பு சிகிச்சையும் டாக்டர் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
வேலை நிறுத்தம் செய்வதாக அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவர்களுடன் மாலை 3 மணிக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}