சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் 3வது இடம் தரப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று திமுக பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவரது ஆட்சி சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சரவையில் முக்கிய நிகழ்வாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக உயர்த்தப்பட்டுள்ளார்.

திமுக வரலாற்றில் இது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மறைந்த கலைஞர் கருணாநிதி காலத்தில் மு.க.ஸ்டாலின் படிப்படியாக நிதானமாக ஒவ்வொரு லெவலாக உயர்த்தப்பட்டு வந்தார். அவரும் துணை முதல்வராக இருந்துள்ளார். இந்த நிலையில், ஸ்டாலினின் புதல்வரான உதயநிதி ஸ்டாலினுக்கு ஒவ்வொரு உயர்வும் மின்னல் வேகத்தில் வந்தவண்ணம் இருக்கிறது. அரசியலுக்கு வந்து 5 ஆண்டு காலத்திலேயே இளைஞர் அணி செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர் என்று உயர்ந்து வந்த உதயநிதி தற்போது துணை முதல்வராகியுள்ளார்.
துணை முதல்வராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் 3வது இடம் தரப்பட்டுள்ளது. வழக்கமாக துணை முதல்வராக இருப்பவர்களுக்கு முதல்வருக்கு அடுத்த இடம்தான் தரப்படுவது வழக்கம். ஆனால் மிகவும் மூத்த தலைவரான துரைமுருகன் 2வது இடத்தில் அப்படியே நீடிக்கிறார். அவருக்கு அடுத்த இடம்தான் உதயநிதிக்குத் தரப்பட்டுள்ளது. மூத்த தலைவர் என்ற அடிப்படையில் துரைமுருகன் இடம் உதயநிதிக்குத் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு 21.. பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு 28
இவர்களுக்கு அடுத்த இடங்களில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, எவ வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, முத்துச்சாமி, பெரியகருப்பன், தாமோ அன்பரசன், மு.ப. சாமிநாதன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், ஆர். ராஜேந்திரன், சக்கரபாணி, வி.செந்தில் பாலாஜி, ஆர். காந்தி, மா. சுப்பிரமணியன், பி. மூர்த்தி, சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வி.மெய்யநாதன், சி.வி.கணேசன், டிஆர்பி ராஜா, டாக்டர் மதிவேந்தன், கயல்மொழி செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.
அமலாக்கத்துறை வழக்கில் கைதாகி சிறையில் கழித்து பின்னர் ஜாமினில் விடுதலையாகி அமைச்சராகியுள்ள செந்தில் பாலாஜிக்கு 21வது இடம் தரப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவ., 27ம் தேதி புயல் உருவாகாது: வானிலை மையம் புதிய தகவல்.. ஆகவே மக்களே.. ரிலாக்ஸா இருங்க!
தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?.. டீலிங்கில் வெற்றி பெற போவது யார்?
தவெக.வில் இணைகிறாரா கே.ஏ.செங்கோட்டையன்? .. திடீர் பரபரப்பு.. பின்னணியில் என்ன நடக்குது?
எத்தியோப்பியாவில் வெடித்த .. ஹெய்லி குபி எரிமலை.. இந்தியா வரை பாதிப்பு!
அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார் பிரதமர் நரேந்திர மோடி
தர்மக்கொடி பறக்குது, ஆனந்தக் கண்ணீர் பெருகுது: நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
ஆண் பாவம் பொல்லாதது.. டோட்டல் டீமும் செம ஹேப்பியாம்.. என்ன காரணம் தெரியுமா?
திமுக அமைச்சர்கள் அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்: அண்ணாமலை!
{{comments.comment}}