டெல்லி: பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜக ஆட்சியே அமைகிறது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று கூறியுள்ள நிலையில் தேசபந்து டிஜிட்டல் என்ற செய்தித் தாளின் எக்சிட் போல் முற்றிலும் நேர் மாறாக, இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கப் போவதாக கூறியுள்ளது.
தேசபந்து டிஜிட்டல் செய்தித்தாள் ஒரு எக்சிட் போலை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், மாறாக இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், பெரும்பான்மை பலம் கிடைக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.
தேசபந்து டிஜிட்டல் எக்சிட் போல் முடிவு இதுதான்:
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், இந்தியா கூட்டணிக்கு 260 முதல் 290 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 215 முதல் 245 இடங்கள் வரையே கிடைக்கும் என்று இது கணித்துள்ளது. மற்றவர்களுக்கு 28 முதல் 48 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புண்டு.
கேரளா
கேரளாவில் 20 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் கூட்டணிக்கு 16 முதல் 18 சீட்டுகள் வரை கிடைக்கும். இடதுசாரி கூட்டணிக்கு 2 முதல் 3 சீட்டுகளே கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகபட்சம் ஒரு இடம் கிடைக்கலாம்.
கர்நாடகா
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் இந்தியா கூட்டணிக்கு 18 முதல் 20 இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 8 முதல் 10 இடங்களுக்கு சான்ஸ் உள்ளது. மற்றவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்.. அசைக்க முடியாத சக்தியாக திமுக!
ஆந்திரப் பிரதேசம்
மொத்தம் உள்ள 28 இடங்களில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 17 இடங்கள் வரை கிடைக்கலாம். தெலுங்குதேசம் கூட்டணிக்கு 7 முதல் 9 இடங்களுக்கு வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சம் 2 சீட் கிடைக்கும்.
தெலங்கானா
தெலங்கானாவில் 17 இடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 இடங்கள் வரை கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புண்டு. பிஆர்எஸ் கட்சிக்கு 2 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி
டெல்லியில் மொத்தம் 7 எம்.பி. தொகுதிகள் உள்ளன. டெல்லியைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் வரை கிடைக்கலாம். அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 2 முதல் 4 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாக் கருத்துக் கணிப்புகளுமே திமுக ஸ்வீப் செய்வதாகத்தான் சொல்லியுள்ளது. தேசபந்துவும் அதையே சொல்லியுள்ளது. அதாவது திமுக கூட்டணிக்கு 37 முதல் 39 சீட்டுகள் வரை கிடைக்கும். அதிமுகவுக்கு அதிகபட்சம் ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகள் பாஜக தரப்பில் மகிழ்ச்சியையும், இந்தியா கூட்டணி தரப்பில் அப்செட்டையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த எக்சிட் போல்களை இறுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உண்மையான ரிசல்ட்தான் யார் வென்றது என்பதை சரியாக சொல்லும் என்பதால் அதுவரை அனைவரும் காத்திருப்போம் என்று இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளன.
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}