ஈரோட்டைக் கலக்கிய.. சென்னை மேயர் பிரியா.. குழந்தையைக் கொஞ்சி வாக்கு சேகரித்தார்!

Feb 21, 2023,09:05 AM IST
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா ராஜனும் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அவர் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.



ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு வருகிற 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் தென்னரசு களம் கண்டுள்ளார். இவர்கள் தவிர நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவையும் போட்டியில் உள்ளன.



இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக  களம் இறங்கியுள்ளன. அமைச்சர்கள் ஷிப்ட் போடாத குறையாக தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டை வேட்டையாடி வருகின்றனர். அதேபோல கூட்டணிக் கட்சிகளின் பிற தலைவர்களும் மாறி மாறி பிரசாரம் செய்து வருகின்றனர்.



இந்த நிலையில் சென்னை  மேயர் பிரியா ராஜனும் பிரசாரக் களத்தில் குதித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்த அவர் கருங்கல்பாளையம் பகுதியில் வீடு வீடாகப் போய் பிரசாரம் செய்தார்.  கையில் பிட் நோட்டீஸை ஏந்தியபடி வந்த அவர் பெண்கள், ஆண்களிடம் நோட்டீஸைக் கொடுத்து அம்மா, அக்கா, அண்ணா மறக்காமல் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று கேட்டுக் கொண்டார்.

பலரும் பிரியாவைப் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர். நீங்கதான் சென்னை மேயரா.. சின்னப் பொண்ணா இருக்கீங்களே என்று கேட்டு வாழ்த்தும் தெரிவித்தனர். அதைக் கேட்டு வெட்கப் புன்னகை சிந்தியவாறு ஓட்டு கேட்டார் பிரியா.  ஒரு வீட்டில் ஓட்டு கேட்டுப் போனபோது அந்த வீட்டுப் பெண் தனது குழந்தையுடன் நின்றிருந்தார். அதைப் பார்த்த பிரியா, குழந்தையின் கன்னத்தைக் கொஞ்சி அவரிடம் பேசினார்.

சமீபத்திய செய்திகள்

news

தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

news

சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....!

news

நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

news

கார்த்திகையில்!

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்