சென்னை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
20 வயதான வலது கை பேட்ஸ்மேனான ப்ரீவிஸ், அதிரடியாக விளையாடக்கூடிய திறமை பெற்றவர். அவர் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணி அவரை ரூபாய் 2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பேபி ஏபி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ப்ரீவிஸ்.
குர்ஜாப்னீத் சிங் இந்த சீசனில் இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முழு சீசனிலிருந்தும் விலகியுள்ளார்.

டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் இணைவது அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இடம் பெறவில்லை. தோனி தலைமையில் சிஎஸ்கே ஆடி வருகிறது.
தொடர் தோல்விகளைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சூப்பராக ஆடி வெற்றி பெற்றது. இளம் வீரர் ஷேக் ரஷீத் சிறப்பாக ஆடியிருந்தார். இந்த நிலையில் பேபி ஏபியும் அணியில் இடம் பெறுகிறார். அவருக்கு ஆடும் வாய்ப்புகிடைத்து அவரும் அதிரடி காட்டினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் போட்டிகளில் கலக்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}