ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

Jul 13, 2025,04:08 PM IST

சென்னை: திருவள்ளூர் அருகே ரயில் டீசல் டேங்கர்கள் வெடித்து பெரும் தீவிபத்து ஏற்பட்டிருப்பது சாதாரண செயல் அல்ல. இதுகுறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர்களுடன் சென்ற ரயிலில் திடீரென தீப்பிடித்து வெடித்துச் சிதறியது. டேங்கர்களில் டீசல் இருந்ததால் தீ குபுகுபுவென எரிந்து அந்தப் பகுதியே பெரும் கரும் புகை மண்டலமாக மாறியது. அருகாமையில் இருந்த வீடுகளிலில் இருந்தோர் பெரும் அவதிக்குள்ளானார்கள். கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலர் வீடுகளைப் பூட்டி விட்டு முக்கியப் பொருட்களுடன் வெளியேறினர்.


தீப்பிடித்துக் கொண்ட டேங்கர்களிடமிருந்து, தீப்பிடிக்காத பிற டேங்கர்களை பிரித்து அப்புறப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்தது. இதில் காவல்துறையினர், தீயணைப்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விரைந்து வந்து தீயில் சிக்கிய டேங்கர்களில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டபோது உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பல மணி நேரமாக எரிந்து வரும் தீயால் அந்தப் பகுதியே பெரும் புகை மண்டலமாக காணப்படுகிறது.




இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் டேங்கர் ரெயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.


உடனடியாக மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படைகளை ஒருங்கிணைத்து, பாதிக்கப்பட்ட மக்களை முழுமையாக, பாதுகாப்புடன் வெளியேற்ற வேண்டும் எனவும், அவர்களுக்கான தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்திடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.


விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்துகிறேன்.


இது சாதாரண தீ விபத்து அல்ல; டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.


இதற்கிடையே டீசல் டேங்கர் ரயில் தீவிபத்து காரணமாக திருவள்ளூர் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பல ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக 30க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

news

அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு

news

விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

news

அட்லீ இயக்கும் படத்தில்.. அல்லு அர்ஜூனுக்கு இத்தனை ரோல்களா.. பரபரக்கும் டோலிவுட்!

news

ப வடிவில் பிள்ளைகளை உட்கார வைத்தால்.. கழுத்து வலிக்காதா.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

news

இங்கிலாந்துடன் அனல் பறக்க மோதும் இந்தியா.. மனைவியுடன் ரோஹித் சர்மா ஹாயாக ரிலாக்ஸ்!

news

ப வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ் வைக்கும் கோரிக்கை!

news

ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

news

சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்