அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!

Jun 11, 2026,05:05 PM IST

- டிலானி ஸ்ரீதரன்


அல்லி நகரின் அகல் விளக்கே 

வெள்ளித் திரையின்

மங்காத ஒளியே, 


கிராமத்து வாழ்க்கையின் வாசனையை

வசனங்களில் பொதித்தவரே,

திரையிசையின் இயக்குநரும் தயாரிப்பாளரும் திரைக்கதை ஆசிரியரும் நடிகருமானவரே,


உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் 

 உள்ளத்தில் உதித்தவற்றை 

வெளிக்காட்டியவரே,


எளிமையின் சின்னமாகவும் ஏற்றத்தின் திண்ணமாகவும் திகழ்ந்தவரே,

சமூகத்தில் சாதி,மதம்

மூடநம்பிக்கையென்ற

முகமூடிகளை 

திரைமூலம் கிழித்தவரே,




துள்ளிடும் காதலை பதினாறு வயதினிலே பக்குவமாக சொன்னவரே,


கிழக்கே போகும் ரயிலிலும் சிகப்பு ரோஜாக்களை தந்தவரே


புதிய வார்ப்புகளில் நிறம் மாறாத பூக்களாக நின்றவரே


கல்லுக்குள் ஈரம் என நிழலாக தொடர்ந்தவரே


அலைகள் ஓய்வதில்லையென காதல் ஓவியமாய் தீட்டியவரே


வாலிபமே வா வா என்று மண்வாசனையுடன் பிணைந்தவரே


தாவணிக் கனவுகளாய் புதுமைப் பெண்களை மெருகூட்டியவரே


ஒரு கைதியின் டயரிக்கும் முதல் மரியாதை கொடுத்தவரே


கடலோர கவிதைகளை வேதம் புதிதென பின்னணிக் குரல் கொடுத்தவரே


என் உயிர் தோழன் என இதயத்தால் வென்றவரே


தந்துவிட்டேன் என்னை என்று நாடோடி  தென்றலாக வருடியவரே


கேப்டன் மகளாக கிழக்குச் சீமையிலே பாசத்தை காட்டியவரே


பசும் பொன்னாக கருத்தம்மாவை சித்தரித்தவரே


அந்தி மந்தாரையாக தமிழ்ச்செல்வனை உருவாக்கியவரே


கண்களால் கைது செய்து ஈர நிலத்தில் விதைத்தவரே


ஆயுத எழுத்தாகி ஈஸ்வரனாக முடி சூடியவரே


தாஜ்மஹாலில் மகனுடன் இணைந்து கடல் பூக்களாகியவரே


சொல்லித் தீருமா  உங்கள் படைப்பின் புகழை,

வெல்லத்தான் முடியுமா உங்கள் தமிழின் அழகை, 


கவிதைக்குள்ளும் காந்தம் வைத்தவர் நீங்கள், 

கிராமத்துக்குள்ளும் திரை உலகத்தை அறிமுகப்படுத்தியவர் நீங்கள்,


சிகரமாக நின்று எளிமையாக கருவை சித்தரித்து,

இயல்பாக விதைத்தீர்கள் வசனங்களை மனதினுள் நுழைந்து, 


இந்திய திரையுலகின் இயக்குநர் இமயமே

பேராசானே !

உங்கள் இறப்பு எங்களுக்கு பேரிழப்பு!


வாழும் காலத்தையும் வாழ்க்கையையும் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய கதாநாயகரே....

மீண்டும் ஒரு பிறப்பு உண்டு கூடிய சீக்கிரம் மண்ணில் உதிக்க வேண்டுகிறோம்.....!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்