சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகஸ்ட் 7ம் அதிகாலையில் திருவண்ணாமலை கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இப்போது வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க லோகேஷ் கனகராஜ், கூலி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ளனர். தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழித் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களை இதில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் வருகிறார்.
திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜ் திருவண்ணாமலை போய் சாமி கும்பிட்டுள்ளார். தன்னை சந்திக்க முயன்ற செய்தியாளர்களிடம், தனியாக பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன் என்று கூறி அவர்களைத் தவிர்த்து விட்டுச் சென்றார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ போன்ற படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் ரத்னா குமார், லோகேஷுடன் வந்திருந்தார்.
கூலி திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் கிடைத்துள்ளது. ரஜினிகாந்த் நடித்த படங்களில் இது போன்ற சான்றிதழ் பெறுவது இதுவே முதல் முறை. இதுகுறித்து ஒரு சானலுக்கு அளித்த பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், இது ஒரு வன்முறையான படமாக இருக்கும். அதேசமயத்தில், குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் அனைத்து உணர்வுகளும் படத்தில் இருக்கும் என்றார்.
சென்னையில் நடந்த ஆடியோ ரிலீஸைத் தொடர்ந்து சமீபத்தில் ஹைதராபாத்தில் தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் ஒரு வீடியோ செய்தி அனுப்பியிருந்தார். அதில் அவர் லோகேஷை ராஜமௌலியுடன் ஒப்பிட்டு பேசினார். "லோகேஷ் கனகராஜ் இங்கே (தமிழ் சினிமாவில்) ராஜமௌலி மாதிரி. ராஜமௌலி படங்கள் எல்லாம் வெற்றி பெறுவது போல, லோகேஷ் படங்கள் எல்லாமே ஹிட் படங்கள்" என்று ரஜினிகாந்த் கூறினார்.
கூலி ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படம். குடும்ப சென்டிமென்ட்டும் இழையோடும். அதேசமயம், லோகேஷின் அஸ்திரமான அதிரடி வெட்டுக் குத்து மேலோங்கியிருக்குமாம். தேவா என்ற வயதான தங்கக் கடத்தல்காரர் வேடத்தில் ரஜினி நடித்துள்ளாராம். 2 மணி நேரம் 48 நிமிடம் ஓடும் வகையில் படம் இருக்கிறதாம்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா மற்றும் சௌபின் ஷாகிர் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கானும் ஒரு சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
டிரம்ப் போட்ட 50% வரியால் பாதிப்பு.. இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு ரூ 87,000 கோடி இழப்பு!
{{comments.comment}}