என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!

Aug 30, 2025,12:46 PM IST

சென்னை: சென்னையில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் பாஜக தரப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட  தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 




இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று உள்ளார். பொதுவாக ஜனவரியில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேமுதிக, பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து ஒன்று பரவி வந்தது. இது குறித்து தேமுதிக எந்த தகவலையும் வெளியிடாமலும், கூட்டணி குறித்த செய்தி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.


இந்நிலையில், சென்னையில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் அருகிலேயே அவர் அமர்ந்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்