சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் நாளை மாலை 6 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் நேற்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவரும் சூழலில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 21-12-25 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது, மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
{{comments.comment}}