சிக்கலின்றி முடிவுக்கு வந்தது திமுக தொகுதிப் பங்கீடு.. காங்கிரஸுக்கு 10.. திமுகவுக்கு 21!

Mar 09, 2024,08:09 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு வழியாக எந்த சிக்கலும் இன்று முடிவுக்கு வந்துள்ளது. கடைசிக் கட்சியாக காங்கிரஸ் கட்சிக்கு இன்று மொத்தம் 10 தொகுதிகளை ஒதுக்கி திமுக உடன்பாடு செய்துள்ளது. இத்துடன் திமுகவின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது.


தொகுதிப் பங்கீட்டின் இறுதியில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், கே.சி. வேணுகோபால் தலைமையிலான காங்கிரஸ் குழுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.




கடந்த 2019 தேர்தலிலும் இதேபோல 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் பெற்றது. அதில் தேனி தொகுதியில் மட்டும் தோற்று மற்ற 8 இடங்களிலும் வென்றது. இந்த முறையும் 9 தொகுதிகளை அது பெற்றுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது இனி அறிவிக்கப்படும்.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் வருமாறு:


திமுக - 21

காங்கிரஸ் - தமிழ்நாடு 9 + புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2

விடுதலைச் சிறுத்தைகள் - 2

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1

மதிமுக - 1

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி - 1


உதயசூரியனின் தொகுதிகள் குறைந்தது


கடந்த 2019 தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டது. இதுதவிர, விடுதலைச் சிறுத்தைகளுக்குக் கொடுத்த 2 தொகுதிகளில் விழுப்புரம் (தனி) , இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட்ட பெரம்பலூர், நாமக்கல்லில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, ஈரோட்டில் போட்டியிட்ட மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டனர். இதன் மூலம் 24 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் வெற்றி பெற்றது. அதாவது உதயசூரியனுக்கு 24 எம்.பிக்கள் கிடைத்தனர்.


இந்த முறை அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய ஜனநாயகக் கட்சி இந்த முறை கூட்டணியில் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக கூறி விட்டது. மதிமுகவும் தனது சின்னத்தில் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மட்டும் உதயசூரியனில் போட்டியிடும். அப்படிப் பார்க்கும்போது இந்த முறை 22 தொகுதிகளில் மட்டுமே உதயசூரியன் களத்தில் நிற்கப் போகிறது. இது கடந்த முறை போட்டியிட்டதை விட 2 தொகுதிகள் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்