மதுரை: மதுரையில் இன்று தொடங்கிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பாக புதிதாக 2 சார்பு அணிகளை உருவாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். வழக்கமாக சென்னையில்தான் நடைபெறும். ஆனால் இந்த வருட பொதுக்குழுவை மதுரையில் கூட்டியுள்ளது திமுக தலைமை. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதை பிரமாண்டமான மாநாடு போல மாற்றி விட்டனர் திமுகவினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிரமாண்ட ரோட்ஷோ நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இன்று பொதுக்குழுக் கூட்டம் கூடியுள்ளது.

தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கடந்த ஓராண்டில் கட்சி ஆற்றிய பணிகள் குறித்து ஆழமாக ஆராயப்படும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மற்றும் செயல்பாட்டு உத்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள், சமூக நீதி கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது போன்ற பல்வேறு முதன்மையான விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் ஆற்றப் போகும் உரை, பொதுக்குழுவின் மிக முக்கியமான அம்சமாகத் திகழும். மேலும் இந்த பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளன. இன்று காலை பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும் முக்கிய அறிவிப்பாக 2 புதிய அணிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு அணியும், ஆசிரியர்கள், கல்வியாளர்களக் கொண்ட கல்வியாளர் அணி அமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
திமுகவில் தற்போது உள்ள சார்பு அணிகள் விவரம்:
பொதுக் குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, மதுரையில் பலம் பொருந்திய திமுக தலைவராக வலம் வந்த தனது அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்தது பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. வருகிற சட்டசபைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பு மு.க.அழகிரி வசம் ஒப்படைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}