ஏன் இந்த அவசரம்?...பார்லிமென்டில் பாஜக.,வை வெளுத்து வாங்கிய கனிமொழி

Apr 17, 2026,09:27 PM IST


புதுடில்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய அரசை மிகக்கடுமையாகச் சாடிப் பேசினார். தென் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அரசியல் அதிகாரம் இந்த மசோதாக்களால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை அவர் விரிவாகப் பட்டியலிட்டார்.


மகளிர் இடஒதுக்கீடு ஒரு கேடயமா? 


மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களை எதிர்த்து இரண்டாவது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் கருப்பு உடையணிந்து பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது பேசிய கனிமொழி, "நாங்கள் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனைக் கேடயமாக முன்னிறுத்தி, அதன் பின்னால் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வருவதையே எதிர்க்கிறோம்," என்றார். 2023-லேயே நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன் என்றும், தற்போது 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெறவுள்ள சூழலில் அவசரமாக இதனை விவாதிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


தென் மாநிலங்களுக்கு நேரும் அநீதி :




தொகுதி மறுவரையறை குறித்துப் பேசுகையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குப் பரிசாக அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கப் பார்க்கிறீர்களா? எம்.பி.க்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தைத் திருத்திவிட முடியும் என்ற நிலை உருவாகும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் கூட தென் மாநிலங்களின் பங்களிப்பு முழுமையாக இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.


"அமித் ஷா சொல்வது ஒன்று.. மசோதாவில் இருப்பது வேறொன்று"


மத்திய அமைச்சர் அமித் ஷா சபைக்கும் மக்களுக்கும் அளிக்கும் விளக்கங்கள் மசோதாவில் உள்ள சரத்துக்களுடன் ஒத்துப்போகவில்லை என்று கனிமொழி சுட்டிக்காட்டினார். தொகுதி மறுவரையறை எந்த அடிப்படையில் செய்யப்படும் என்பது குறித்துத் தெளிவான விளக்கம் தேவை என அவர் வலியுறுத்தினார். கூட்டாட்சியைச் சிதைக்கும் முயற்சியாகவே இந்த மசோதா இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.


"பெண் தெய்வமான காளியும் கருப்பு உடைதான்.."


திமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சபைக்கு வந்ததை பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கனிமொழி பேசினார். "இந்துத்துவாவைப் பாதுகாப்பதாகச் சொல்லும் ஆளும் கட்சியினருக்குக் கருப்பு நிறக் கடவுளான காளி நினைவில் இல்லையா? பெண் சக்தியைப் பறைசாற்றும் காளி தேவியும் கருப்பு ஆடைதான் அணிந்துள்ளார். அவர் ஈகோ மற்றும் அராஜகத்தை விரட்டுபவர். அதேபோல, சுயமரியாதை மற்றும் போராட்ட குணத்தைக் கற்றுக்கொடுத்த பெரியாரின் நிறமான கருப்பை அணிந்து எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்," என்று ஆவேசமாகப் பேசினார்.


இந்த விவாதத்தின் மூலம், தென் மாநிலங்களின் மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக அவர்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமையக்கூடாது என்ற வலுவான கோரிக்கையை திமுக முன் வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்