சந்திரயான் திட்டத்திற்கு பெயர் வைத்தது இவர் தானா?

Aug 23, 2023,07:21 PM IST
டெல்லி : இந்தியாவின் வரலாற்று சாதனையான சந்திரயான் 3 இன்று மாலை நிலவில் தரையிறங்க தயாராகி வருகிறது. நிலவின் நிலப்பரப்பை விக்ரம் லேண்டர் நெருங்கி வருவரை உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

இந்நிலையில் சந்திரயான் திட்டம் உருவான வரலாறு குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வருகின்றன.



நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி உள்ளது. இது இன்ற மாலை 06.20 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை சந்திரயான் திட்டம் வெற்றி அடைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நிலவில் ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாக தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். இதற்கு முன் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவில் இறங்கி ஆய்வு செய்துள்ளன.

ஆனால் அமெரிக்காவும், ரஷ்யாவும் நிலவின் வேறு வேறு இடங்களில் தான் ஆய்வு செய்து வருகின்றன. நிலவின் தெற்கு பகுதியில் ஆய்வை துவக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற  உள்ளது. இது இந்தியாவின் மிகப் பெரிய வரலாற்று சாதனை என்பதை தாண்டி, உலக அரங்கில் இந்தியாவின் பலத்தை பல மடங்கு உயர்த்திக் காட்டக் கூடிய திட்டமாகும்.

இந்த பெருமைக்கு அடித்தளம் அமைத்தவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தான். 1999 ம் ஆண்டு நிலவில் ஆய்வு செய்வதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அவர் தான். விஞ்ஞானிகளின் இந்த திட்டத்தை ஊக்குவித்து, ஒப்புதல் அளித்த வாஜ்பாய், முதலில் இந்த திட்டத்திற்கு வைத்த பெயர் "சோமயான்".



சமஸ்கிருதத்தில் சோமன் என்பது நிலவை குறிக்கும் பெயர் ஆகும். இந்த சமஸ்கிருத சொல்லை அடிப்படையாகக் கொண்டே இந்த திட்டத்திற்கு சோமயான் என பெயரிட்டார். பிறகு அவரே சோமயான் என்பதை மாற்றி, அனைவருக்கும் புரியும் வகையில் சந்திரயான் என மாற்றினார். இந்தியா பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்த நாடாக மாறுவதற்கும், நிலவை நோக்கிய பல ஆய்வு பயணங்களுக்கும் ஆடித்தளமாக அமைந்தது என தெரிவித்துள்ளார் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தெரிவித்துள்ளார்.

2003 ம் ஆண்டு இந்தியாவின் 56 வது சுதந்திர விழாவின் போது செங்கோட்டையில் வாஜ்பாய் ஆற்றிய உரையின் போது தான் முதன் முறையாக நிலவின் ஆய்வை துவங்கும் இந்தியாவின் திட்டம் பற்றி அவர் வெளியிட்டார். இதற்கு சந்திரயான் 1 என பெயரிடப்பட்டது. 2008 ம் இந்தியா நிலவிற்கு விண்கலத்தை அனுப்ப உள்ளது. அதற்கு சந்திரயான் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார் என கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார். அவரது கனவு நினைவாக போகும் நாள் இன்று வந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்