மாஸ்கோ: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மாஸ்கோவில் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது.
மூத்த அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் இந்த மோதலை நகைச்சுவையாகவும், வாய்ப்பாகவும் கருதுகின்றனர். எலான் மஸ்க் அமெரிக்காவில் சிக்கல்களை எதிர்கொண்டால் ரஷ்யாவுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், டிரம்ப் மற்றும் மஸ்க் இடையே சமாதான உடன்படிக்கை செய்து வைக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நண்பர்களாக வலம் வந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் மஸ்க் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது. இதனால், மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் குறைந்தது. இந்த மோதல் ரஷ்யாவிற்கு சாதகமாக இருப்பதாக சில ரஷ்ய அதிகாரிகள் கருதுகின்றனர். வெள்ளை மாளிகை, டிரம்ப் மற்றும் மஸ்க் இடையே உடனடி சமாதானம் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த எம்பி டிமிட்ரி ரோகோஜின்,"எலான், வருத்தப்பட வேண்டாம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட்டால், எங்களிடம் வாருங்கள். இங்கே நீங்கள் நம்பகமான தோழர்களையும், தொழில்நுட்ப படைப்பாற்றலுக்கான முழு சுதந்திரத்தையும் காண்பீர்கள் என்று அவர் கிண்டலாக அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், "நியாயமான கட்டணத்தில் D மற்றும் E இடையே ஒரு சமாதான ஒப்பந்தத்தை முடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று கூறியுள்ளார். இதற்குப் பிரதிஉபகாரமாக ஸ்டார்லிங்க் பங்குகளை கட்டணமாக அவர் கேட்டுள்ளார்.
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
திருவள்ளூரில் அரசு பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
தேடல்!
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!
சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}