அமெரிக்க அதிபர் தேர்தல்  களத்தில் டிரம்ப்.. "நான் ரொம்பக் கோபமா இருக்கேன்"!

Jan 30, 2023,01:01 PM IST
கொலம்பியா: 2024  அமெரிக்க  அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். 2024 தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்த பின்னர் இப்போதுதான் தனது பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்.



அவரது முடக்கி வைக்கப்பட்ட சமூக வலைதளப் பக்கங்கள் மீண்டும் செயல்முறைக்கு வந்துள்ள நிலையில் டிரம்ப் டீம், தேர்தல் களத்தில் குதித்துள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சலேம் நகரிலும், கொலம்பியாவிலும் அவர் இரண்டு கூட்டங்களில் அடுத்தடுத்து பேசியுள்ளார்.

சலேம் கூட்டத்தில் அவர் பேசும்போது,  நான் இப்போது மிகவும் கோபமாக இருக்கிறேன். முன்பு இருந்ததை விட இப்போது அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார் டிரம்ப். கொலம்பியாவில் நடந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அவரது பேச்சைக் கேட்டனர். தெற்கு கலிபோர்னியா மாகாண ஆளுநர் ஹென்றி மெக்மாஸ்டர், செனட் உறுப்பினர் லின்ட்சே கிரஹாம் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிபர் ஜோ பைடன்  மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா என்று தெரியவில்லை. ஆனால்அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப் போட்டியிட்டால் அவரை டிரம்ப்பால் எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டிரம்ப் சார்ந்த குடியரசுக் கட்சி சார்பில்அதிபர் தேர்தலில் போட்டியிட பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக புளோரிடா ஆளுநர் ரான் டிசான்டிஸ், நியூ ஹாம்ப்ஷயர் ஆளுநர் கிறிஸ் சுனுனு, முன்னாள் தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹாலி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். இவர்களையெல்லாம் டிரம்ப் வீழ்த்த வேண்டியுள்ளது. ஆனால் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது என்பதில் டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளார். தனது பிரசாரத்தையும் அதனால்தான் முன்கூட்டியே அவர் ஆரம்பித்து விட்டார்.அவர் பிடிவாதக்காரர் என்பதால் அவ்வளவு சீக்கிரம் பின்வாங்க மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்