2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

Aug 23, 2025,11:34 AM IST
மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து இப்போது பேசுவது சரியில்லை. அவர்கள் 2027 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை. ஆனால்  அதிலிருந்தும் அவர்கள் ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் இவர்களின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ளார் ராஜீவ் சுக்லா. இதுகுறித்து அவர் கூறுகையில், அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள்? ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் இன்னும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். அவர்கள் இன்னும் விளையாடும்போது, இப்போது ஏன் பிரியாவிடை பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் ஏன் இப்போதே கவலைப்படுகிறீர்கள்?. 



பிசிசிஐ யாரையும் ஓய்வு பெறக் கூறாது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விஷயத்திலும் இதுவே நடக்கும். அவர்கள் சொந்தமாகவே முடிவை எடுக்க வேண்டும். விராட் கோலி இன்னும் உடற்தகுதியுடன் இருக்கிறார். ரோஹித் சர்மா நன்றாக விளையாடி வருகிறார். எனவே அவர்களின் பிரியாவிடை பற்றி இப்போதே நினைக்க வேண்டாம் என்றா் அவர்.

இதற்கிடையே, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்காக பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் அக்டோபர் மாதம் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

news

விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 23, 2025... இன்று நல்லது நடக்கும்

news

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தடை.. தடுப்பூசி போட்டு விடுவிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

பக்குவம் இல்லாதவரை மக்கள் எப்படி ஏற்பார்கள்? : விஜய் குறித்து அண்ணாமலை கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்