- முனைவர் கோ.லதா
ஆரோக்கியமே அருநிதியாகும் - அதை
அன்புடன் காத்தல் பெருநெறியாகும்
பாரோர் போற்றும் உடல்நலம் பேணி - நாம்
பல்லாண்டு வாழ வழி செய்வோமே
காலையில் எழுந்து கடமைகள் முடித்து - உடல்
கடுமையாய் உழைக்கப் பயிற்சி செய்வோம்
ஞாலமே வியக்கும் உடல்வலிமை கொண்டே - நாம்
நலமுடன் வாழ உறுதி கொள்வோம்

உண்ணும் உணவே மருந்தென அறிவாய் - நல்
உயிரைத் தாங்கும் அமுதெனக் கொள்வாய்
கண்ணைக் காக்கும் இமைகளைப் போலே - நம்
காயத்தைக் காப்பதே கடமை யாகும்
தூய்மை காத்துச் சூழலை வைப்பாய் - வரும்
தொற்று நோய்கள் விரட்டி அடிப்பாய்,
ஆய்ந்து தெளிந்தே குடிநீர் அருந்தி - உன்
அகமும் புறமும் நலம்பெறச் செய்வாய்
உறக்கம் என்பது உடலுக்குத் தேவை - அது
உழைக்கும் உயிர்க்கு இயற்கை ஈய்வே
மறந்தும் தீய பழக்கம் கொள்ளேல் - அது
மனதின் அமைதி கெடுத்தே கொள்ளும்
ஆரோக் கியமே வாழ்வின் அடிப்படை - அதை
அறிந்தே நீக்குவாய் நோயின் தடைபடை
சீரோடு வாழ நல்வழி காண்போம் - இந்த
சிந்தனை ஏந்தி வையகம் வெல்வோம்
--
உலகப் பாதுகாப்புத் தினம்.

ஏப்ரல் இருபத்து எட்டாம் நாளில் - இந்த
உலகமே போற்றும் பாதுகாப்பு நாளில்
அர்ப்பணிப் போடு பணியாற்று மக்கள்- நல்
ஆரோக்கியமே உயர்வெனக் கொள்வோம்
தலைமுறைக் காக்கும் தலைக்கவசம் அணிவோம் - நம்
தன்னலம் விடுத்துப் பாதுகாப்புப் பேணுவோம்
நிலை எனக் கொண்டு விதி இணை
பின்பற்றி வரும் நிமிடம் எலாம்விழிப் புணர்வுடன் இருப்போம்
இயந்திரச் சாலை இடர்களை நீக்கி - நல்
இதயத் துடிப்பினைச் சீராகக் காப்போம்
துயரம் தராத பணியிடம் அமைத்தே - தினம்
தொழிலாளர் வாழ்வை ஒளியுறச் செய்வோம்
மின்சாரப் பாதை மேலோட்டம் தவிர்த்து - விதி
முறைப்படி செய்திடும் விழிப்புணர்வோடு
பின்தொடர் வோர்க்கு வழிகாட்டி நிற்போம் - நம்
பேருயிர் காப்பதே கடமையெனக் கொள்வோம்
சுற்றுச் சூழலைத் தூய்மையாய் வைப்போம் -
உடல் சுறுசுறுப் போடு நலத்தினைப் பெறுவோம்
வெற்றிகள் சேரப் பாதுகாப்பு வேண்டும் - அது
வேலையின் தாரக மந்திரம் ஆகும்
கூடி உழைப்போம் விபத்தினைத் தடுத்தே - வரும்
கேடுகள் போக்கி வளமையைக் காண்போம்
நாடிடும் இலக்கை நன்முறையை எய்தி - என்றும்
நலமுடன் வாழ உறுதி ஏற்போம்!
(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா, கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர், சென்னை)
Good Morning America..Happy halloween day.. ஹாலோவீன் புதிர் பிரமை!
வங்கக்கடலில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது!
39 வயதிலேயே சங்கீத கலாநிதி: கர்நாடக இசையின் அசைக்க முடியாத மேதை - செம்மங்குடி!
தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?
முதல்வர் விஜய்யின் மெகா டூர் பிளான்: 5 தொகுதி இடைத்தேர்தலில் தெறிக்க விட தவெக ரெடி!
சென்னை, தேனியை தொடர்ந்து கோவையில் இருந்தும் கைதி தப்பியோட்டம் - 4 போலீஸார் சஸ்பெண்ட்
சோர்வால் வளர்ச்சி கெடும் சுயமில்லா வேலை கெடும் - ஔவையின் பொன்மொழி 60 (8)
வெயிலோ மழையோ.. எதுவா இருந்தா என்ன.. சுரைக்காய் பஜ்ஜிதான் துணைக்கு இருக்கே!
யாருக்கும் தெரியாத அம்மாவின் வலி - கடைசி பெஞ்சில் இருந்த பெண்(4)
{{comments.comment}}