சென்னை : தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தின் கவனமும் தைலாபுரம் பக்கம் தான் தற்போது திரும்பி உள்ளது. அன்புமணி மீதான நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 03ம் தேதி ராமதாஸ் அறிவிப்பார் என அக்கட்சியின் எம்எல்ஏ அருள் கூறி இருப்பதால், நாளை என்ன நடக்கும், என்ன அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் சட்ட விதிகளில் சில முக்கிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. அதோடு 9 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவும் அமைக்கப்பட்டு, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அன்புமணி மீது, ஒட்டுக்கேட்டது, கட்சிக்கு எதிராக செயல்பட்டது என மொத்தம் 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க ஆகஸ்ட் 31ம் தேதி வரை அன்புமணிக்கு கட்சி தலைமை அவகாசம் விதித்தது. ஆனால் இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அன்புமணி தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலோ, விளக்கமோ வரவில்லை.
அன்புமணிக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து விட்டதால் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 01ம் தேதியான நேற்றே பாமக நிறுவனர் ராமதாசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் மீடியாக்களில் செய்தி பரவியது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தன்னுடைய திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் படி ஒழுங்கு நடவடிக்கை குழுவினரை மட்டும் சந்தித்து ஆலோசனை நடத்தினார் ராமதாஸ். ஒழுங்கு நடவடிக்கை குழுவினரும் தங்களின் கருத்துக்களை சீல் இடப்பட்ட கவரில் கட்சி தலைமையிடம் ஒப்படைத்ததாக அக்கட்சியின் எம்எல்ஏ அருள் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தைலாபுரத்தில் இருந்து நீண்ட லிஸ்ட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிறுவனர் ராமதாஸின் அடுத்த ஒரு வாரத்திற்கான நிகழ்ச்சி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாள் கட்சியின் கிளை செயலாளர்களுடன் ஆலோசனை, அடுத்த நாள் ஒழுங்கு நடவடிக்கை குழுவுடன் ஆலோசனை, அடுத்த நாள் தேசிய மற்றும் மாநில கிளை மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை, அடுத்த நாள் செய்தியாளர் சந்திப்பு, அதற்கு அடுத்த நாள் மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என இடை விடாமல் தினசரி நிகழ்ச்சி முடிவு செய்யப்பட்டுள்ளன.
அன்புமணி மீதான நடவடிக்கை பற்றி அறிவிப்பு என்று பார்த்தால், ராமதாஸ் என்ன தினசரி இப்படி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறாரே என சாதாரணமாக நினைக்க தோன்றலாம். ஆனால் இதில் தான் ராமதாஸ், தான் ஒரு அனபவம் வாய்ந்த அரசியல் தலைவர் என்பதை நிரூபித்துள்ளார். கிளை செயலாளர்கள் என்பவர்கள் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் விபரங்களை நேரடியாக உறுப்பினர்களை சந்தித்து சேகரிக்கக் கூடியவர். தற்போது கட்சி உறுப்பினர்களில் தனக்கு ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற லிஸ்டை தயார் செய்வதற்காக தான் இந்த சந்திப்பு.
இப்போது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் கருத்தும் ரெடி, கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களின் தனக்கு ஆதரவானவர்களின் லிஸ்டும் ரெடி. நாளை செய்தியாளர்களை சந்திக்கும் டாக்டர் ராமதாஸ், அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யும் அறிவிப்பை வெளியிட போகிறாராம். வழக்கமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்றால் 6 மாதங்களுக்கு தான் செய்வார்கள். ஆனால் அப்படி 6 மாதம் சஸ்பெண்ட் செய்தால் தேர்தல் சமயத்தில் மீண்டும் அன்புமணி பிரச்சனை செய்ய வாய்ப்பு உள்ளது என்பதால், தேர்தல் சமயத்தில் கட்சியின் எந்த விவகாரத்திலும் அவர் தலையிடாமல் இருப்பதற்காக அவரை ஒரு வருடத்திற்கு கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய திட்டமிட்டுள்ளாராம் ராமதாஸ்.
ஒருவேளை இந்த சஸ்பெண்டை எதிர்த்து அன்புமணி கோர்ட்டுக்கு சென்றால் கூட அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்காக தான் ஏற்கனவே பொதுக்குழுவில் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தம், கட்சி உறுப்பினர்களின் ஆதரவு, அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அதற்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் அளித்த கருத்துக்கள் ஆகிய அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். இது அன்புமணிக்கு நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்று ராமதாஸ் தரப்பு சொல்கிறது.
ஆனால் அதிமுக விவகாரத்தில்தான் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து வருகிறோமே.. அந்த வகையில் பாமக விவகாரமும் எப்படியெல்லாம் டிவிஸ்ட் அடிக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?
கிடுகிடு வென உயர்ந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
ஓணம் வந்தல்லோ.. திருவோணம் வந்தல்லோ.. களை கட்டி வரும் கேரளத்து திருவிழா!
எப்போ தான் பாஸ் களத்துக்கு வருவீங்க?.. குமுறும் தவெக.,வினர்.. வேகம் காட்டுவாரா விஜய்?
"ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது".. கிரிஸில்டாவின் புகாருக்கு.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்த மறைமுக பதில்
அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்
செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு
ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?
{{comments.comment}}