புதுச்சேரியில் தேசியக் கொடியேற்றினார் டாக்டர் தமிழிசை

Aug 15, 2023,11:37 AM IST
புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியேற்றி வைத்தார்.

தெலங்கானா ஆளுநராக உள்ள டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி யூனியன் பிரதேச  துணை நிலை ஆளுநராகவும் இருக்கிறார். இன்று சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி ராஜ் நிவாஸில்  சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கொடியேற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.



முன்னதாக நேற்று தமிழிசை செளந்தரராஜன் விடுத்த வாழ்த்துச் செய்தியில்,  புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நமது தேசத் தலைவர்கள் அரும்பாடுபட்டு தங்கள் இன்னுயிரைத் தந்து நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்தார்கள். அத்தகைய தியாகச் தலைவர்களின் வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.



தொலைநோக்குப் பார்வை கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையின்கீழ் - கல்வி, மருத்துவம், அறிவியல், வேளாண்மை, விண்வெளி ஆராய்ச்சி என்று பல துறைகளிலும் இந்தியா இன்று உலகின் முன்னோடி நாடாகத் திகழ்கிறது.

நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும். புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

பிளாஸ்டிக் இல்லாத வளாகம்

இதற்கிடையே,  புதுச்சேரி ஆளுநர் மாளிகை வளாகம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத வளாகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உறுதி மொழியை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.



நேற்று இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், குவளைகள், தட்டுகள் போன்றவற்றைத் தவிர்த்து அதற்கு பதிலாக துணிப்பை, காகிதப்பை, சணல்பை, சில்வர் பொருட்கள் போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப் பட்டது.

மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு இல்லாத புதுச்சேரியை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள தடை ஆணையை மதிக்கவும் புதுச்சேரி அரசின் நோக்கத்திற்கு ஆதரவாக இருக்கவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்