சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் ஆட்சி அமைக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என சூசகமாக கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிமுக- பாஜக கூட்டணியை அறிவித்தபோதே 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் இதனை மறுத்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என கூறினார். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கும் என டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சூசமாக பேசியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,

நிச்சயமாக தமிழகம் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் இருவரும் இருந்தோம் என்றால் எங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். நான் ஏற்கனவே சொன்னது போல், குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும். ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். ஆக அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால் தான் நாம் எல்லோரும் இலை போட்டு சரியாக சாப்பிட முடியும் என கூறினார்.
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}