மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சி.வி. மெய்யநாதன், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் சி.வி. மெய்யநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இன்று காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அமைச்சர் மெய்யநாதன், திருவெண்காடு பகுதியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் துர்கா ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார். ஆலங்குடி தொகுதியிலிருந்து 2 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மெய்யநாதன். 2016 சட்டசபைத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் 2021 தேர்தலில் இவருக்கு சீட் கிடைத்தது. அதில் அதிமுக வேட்பாளர் தர்மா தங்கவேலை தோற்கடித்து வெற்றி பெற்று அமைச்சரும் ஆனார்.
இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் குறிப்பிட்டார் மெய்யநாதன். அவர் பேசுகையில், கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 2016 தேர்தலில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தலைவர், 2வதாக ஆலங்குடி தொகுதியில் 2021ல் நடந்த தேர்தலில் வாய்ப்பு அளித்தார். அதற்கு முக்கியக் காரணம், இந்த மண்ணிலிருந்து பிறந்து இந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த துர்கா ஸ்டாலின் அம்மா அவர்கள்தான். அவர்தான் மீண்டும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து அமைச்சராகவும் உயரவும் காரணமானவர் என்று நன்றியுடன் பதிவு செய்கிறேன்.
அந்த வாய்ப்பு கிடைத்திருக்காவிட்டால், எனது அரசியல் பாதையே திசை மாறிப் போயிருக்கும். அப்படி பெரிதும் மதிக்கிற துர்கா ஸ்டாலின் பிறந்த மண்ணில் இந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினா்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}