டில்லி : தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது தேர்தல் கமிஷன். இதன் முதல் கட்டமாக அதிகாரிகளுக்கு இன்று முதல் பயிற்சிகள் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசினார் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார். அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நவம்பர் 04ம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு துவங்க உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு அக்டோபர் 28ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 09ம் தேதி வெளியாகும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 07இல் வெளியீடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றிற்கான காலிக்கெடு டிசம்பர் 09ம் தேதி துவங்கி, ஜனவரி 08ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் சரி பார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளதாகவும் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 14ம் தேதி பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் கமிஷன் இன்னும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}