சென்னை : 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய 6 மாதங்கள் உள்ளன. அனைத்து கட்சிகளும் கூட்டணிகள் பற்றி பேசிக் கொண்டிருக்கையில், யாரையும் எதிர்பார்க்காமல் முதல் ஆளாக தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
மற்ற கட்சிகள் அனைத்தும் வழக்கமான செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கையில், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கையில் இவர் எதற்காக இப்போதே ஊர் ஊராக சுற்றுப் பயணம் சென்று கொண்டிருக்கிறார் என ஆரம்பத்தில் மக்கள் மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நினைத்தன. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கும் விஷயங்கள், எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்திற்கு பிறகு அந்த பகுதிகளில் நடந்துள்ள மாற்றங்கள், தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் ஆகியவற்றின் சர்வே முடிவுகள் அனைத்து கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது.
தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது. இது வரை கிடைத்துள்ள தகவல்களின் படி, இன்றைய தேதி வரை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தற்போது வரை 122 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. மொத்தம் 265 மையங்களில் அவர் மக்களை சந்தித்து பேசி உள்ளார். தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் மட்டுமல்ல, அந்தந்த பகுதிப் பிரச்சனைகளையும் பேசி வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் போது இப்போதே தமிழகத்தில் உள்ள பாதி தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டார். இனி வரும் நாட்களில் மீதமுள்ள 114 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்து விட்டு, அதற்கு பிறகு மாவட்டந்தோறும் மண்டல மாநாடு நடத்த போவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நடத்தி முடித்தால் அதிமுக.,வின் பலம் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சென்று விடும் என சொல்லப்படுகிறது. இது தான் தற்போது மற்ற கட்சிகளை மட்டுமல்ல, கூட்டணி கட்சியான பாஜக.,வையே உலுக்கி இருக்கிறதாம்.
எதிர்க்கட்சி தலைவர், அதுவும் இல்லாமல் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஏதாவது செய்து தானே ஆக வேண்டும் என நினைக்க வேண்டாம். இந்த 2 மாத பிரச்சாரத்தில் அதிமுக அடைந்த பலன் என்ன என்று கேட்டால், கடந்த 4 மாதங்களுக்கு முன் இருந்த அரசியல் நிலவரம் இன்று இல்லை என்பதை தான் சர்வே முடிவுகள் சொல்கின்றன. அதாவது, 4 மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட சர்வேயின் போது திமுக.,வின் பலம் அதிகரித்தும், அதிமுக பலம் இழந்தும் இருந்துள்ளது. ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டதாம். தமிழகத்தில் தினம் தினம் அதிகரித்து வரும் பிரச்சனைகள் காரணமாக திமுக., மீதான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாம். இந்த எதிர்ப்புகள் தற்போது அதிமுக.,விற்கு ஆதரவாகவும் மாறி வருகிறதாம்.
மற்றொரு விஷயத்தையும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டும். இதுவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே தனி ஆளாக பிரச்சாரம் செய்து பேசி வருகிறார். இன்னும் கட்சியினரோ, கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களோ பிரச்சார களத்தில் இறங்கவில்லை. திமுக.,வை வீழ்த்துவதற்காகவும், அதிமுக.,வின் ஆதரவு மற்றும் திமுக.,வின் எதிர்ப்பு ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் அள்ளுவதற்காகவும் சசிகலாவை அதிமுக.,விற்காக பிரச்சாரம் செய்ய வைக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஏற்கனவே டிடிவி தினகரன் அதிமுக-பாஜக கூட்டணியில் தான் இருக்கிறார். இப்போது சசிகலாவே அதிமுக.,விற்காக பிரச்சாரம் செய்ய துவங்கி விட்டால் முக்குலத்தோர் வாக்குகள் அப்படியே அதிமுக பக்கம் வந்து விடும்.
தற்போதுள்ள நிலவரப்படி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் தான் அதிமுக பலவீனமாக உள்ளது. இப்போது பிளவுபட்ட அதிமுக ஒன்றிணைவதாலும், கூட்டணி கட்சிகள் இணைவதாலும் இந்த பகுதிகளிலும் அதிமுக பலம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அரசியல் கணிப்புகள் சொல்கின்றன.
அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?
PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!
மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
இறக்குமதி வரியால் பாதிப்படைந்தவர்களுக்கு வாராக்கடன் விதிகளை தளர்த்த வேண்டும் : எம்.பி.சு வெங்கடேசன்
uncle என விஜய் சொன்னது...டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில்
புற்றுநோய் சுற்றுலாவால் ஹிமாச்சல் பிரதேசம் பாதிப்பு.. இப்படியே போனால்.. நிபுணர்கள் எச்சரிக்கை
2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்
{{comments.comment}}