எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

Sep 15, 2025,02:40 PM IST

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டில்லி சென்று வந்ததும் நல்லது நடக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். என்ன நல்லது நடக்க போகிறது? யாருக்கு நல்லது நடக்க போகிறது என்ற சுவாரஸ்யமான எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தீவிரமாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, செப்டம்பர் 16ம் தேதியான நாளை டில்லி செல்ல உள்ளார். புதிய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லுவதற்காக இபிஎஸ் டில்லி செல்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் டில்லி செல்லும் அவர் கண்டிப்பாக டில்லி பாஜக மேலிடத் தலைவர்களான அமித்ஷா உள்ளிட்டோரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் உறுதிப்படுத்தி உள்ளார்.




"நாளை இபிஎஸ் டில்லி சென்று திரும்பிய பிறகு நல்ல செய்தி வரும்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே செங்கோட்டையன் கடந்த வாரம் டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளார் செங்கோட்டையன். விரைவில் ஓ.பன்னீர்செல்வமும் சந்திப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை இபிஎஸ்ஸும் டில்லி செல்ல உள்ளார்.


டில்லி செல்லவுள்ளதால், இபிஎஸ் பிரச்சார சுற்றுப் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு, செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு அவர் மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்போது நயினார் சொன்ன, அந்த நல்ல விஷயம் என்ன? இது யாருக்கு நல்லது? என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற விவகாரம் தான் தற்போது மிகப் பெரிய விவகாரமாக உள்ளதால், அதிமுக.,வை ஒன்றிணைப்பது குறித்து பாஜக மேலிடம் இபிஎஸ் இடம் பேச வாய்ப்புள்ளது. யாரை எல்லாம் அதிமுக.,வில் சேர்த்துக் கொள்ளலாம் என இபிஎஸ் இடம் கருத்து கேட்க வாய்ப்புள்ளது. அதே போல் பாமக, தேமுக போன்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் சேர்ப்பதற்கான விஷயங்கள் குறித்தும் பாஜக தலைமை பேச வாய்ப்புள்ளது. 


சமீபத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை துவக்கி உள்ள தவெக தலைவர் விஜய், திமுக.,வை தாக்கி பேசிய அளவிற்கு பாஜக.,வை விமர்சிக்கவில்லை. திமுகவை விமர்சிப்பதற்காக, பாஜகவையும் ஒப்புக்கு விமர்சித்தது போலவே அவரது பேச்சு பார்க்கப்படுகிறது. அதோடு அதிமுக., பற்றி அவர் பேசவே இல்லை. அதனால் அவரையும் அதிமுக கூட்டணிக்குள் வர வழைப்பதற்கான முயற்சிகளை செய்வது பற்றியும் இபிஎஸ் உடன் பாஜக தலைமை பேச வாய்ப்புள்ளது. 


திமுக, அதிமுக.,விற்குள் எழும் கலகக் குரல்கள் ஆகியவற்றை சமாளித்து, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யுக்தி குறித்தும் இபிஎஸ் உடன் பாஜக பேச வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று திரும்பிய பின்னர்தான் தெரியும்.. என்ன நடக்கப் போகிறது என்று.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

உயிரின் சிரிப்பு

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

கல்லறை தேடுகிறது!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை குறைவு.. சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்