திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை.. அரசாங்கம் இருக்கிறதா?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

Nov 10, 2025,02:28 PM IST

சென்னை: திமுக ஆட்சியில் பெண்களுக்கு, சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு காவல்துறையைக் கண்டு கொஞ்சம் கூட அச்சமில்லை. அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


இது குறித்து கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், திமுகவினர்களுக்கு எங்கள் கூட்டணியை பற்றி குறை சொல்வதே வாடிக்கையாகி விட்டது. அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தது உறுதியான பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தி விட்டார். இந்த கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என தெளிவாக கூறிவிட்டார். அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால், பாஜகவுடனான கூட்டணியை திமுகவினர் விமர்சிக்கின்றனர். 




முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவிடுத்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என எஸ்ஐஆர் வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 9 முறை நடந்துள்ளது. எஸ்ஐஆர் என்றாலே திமுக அலறுகிறது, பதறுகிறது. போலி வாக்காளர்களை நீக்க எஸ்ஐஆர் அவசியம். தமிழ்நா்டில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். பணிகளில் தாமதம் எற்பட வாய்ப்பே இல்லை. எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்.


நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒரு மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டிருந்தபோது, மாணவனை அனுப்பிவிட்டு, மாணவியை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். திருவண்ணாமலையிலும் காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டனர். கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. இப்போது அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.


திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாகவும் திமுகவின் சமூக நலத்துறை அமைச்சரே பேசியுள்ளார். ஒரு திறமையற்ற, பொம்மை முதல்வரிடம் காவல்துறை இருப்பதால், இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. 50 மாத திமுக ஆட்சியில் 6,400 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளதால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. 


இவ்வளவு கொடுமைகளுக்கு இடையிலும் இதுவரை தமிழக அரசு நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை. தங்களுக்கு வேண்டியப்பட்டவரை டிஜிபியாக்க முயற்சி செய்கிறார்கள். சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்துக்கொடுத்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை... அண்ணாமலை விமர்சனம்!

news

தமிழகத்தில் மழை தொடரும்... நாளை 3 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது: வானிலை மையம் தகவல்!

news

அம்மாவின் அன்பு!

news

கடன் -தலைக்குனிவு

news

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பில்லை.. அரசாங்கம் இருக்கிறதா?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!

news

சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

news

ரஜினி, சூர்யா, தனுஷ் படங்களுக்கு புது செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. ஒத்து வருமா?

news

துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்