சென்னை: தேர்தல் ஆணையத்தின் எந்த விதிமுறைக்குள்ளும் வரத் தவறிய கட்சிகளுக்கான பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 42 கட்சிகளுக்கான பதிவு ரத்தாகியுள்ளது.
தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடி வந்ததற்கு இதுதான் காரணம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் பிற கட்சிகளின் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றன. காரணம், திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணையும்போது அவர்களுக்கு சீட் கட்சி என்று பார்த்துத் தருவதில்லை. மாறாக தங்களது சின்னத்தில் அதாவது உதயசூரியன் அல்லது இரட்டை இலையில் போட்டியிடுங்க என்று கூறித்தான் ஒரு சீட்டோ அல்லது 2 சீட்டோ தருவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஏதாவது ஒரு ஆதாயத்தால் இதற்கு ஒத்துக் கொண்டுதான் சின்னக் கட்சிகள் பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அப்படிப் போட்டியிட்ட கட்சிகளுக்குத்தான் இப்போது சிக்கல் வந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கட்சிகளின் பதிவையும், அங்கீகாரத்தையும் தேர்தல் ஆணையம் தற்போது ரத்து செய்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முறையைச் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆறு வருடங்களில் தேர்தல்களில் போட்டியிடாதது உட்பட பல்வேறு விதிமுறைகளை மீறிய 474 பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கியுள்ளது.
தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் கட்டமாக 334 கட்சிகளை நீக்கியது. தற்போது, செப்டம்பர் 18ஆம் தேதி 474 கட்சிகளை நீக்கியதன் மூலம், கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 808 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, தற்போது 2,046 கட்சிகள் உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 29A-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த சட்டத்தின்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிக்கு சின்னம் மற்றும் வரி விலக்கு போன்ற சில சலுகைகள் கிடைக்கும். அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி ஆறு வருடங்களாகத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மேலும் 359 கட்சிகளைக் கண்டறிந்துள்ளது. அவை கடந்த மூன்று நிதியாண்டுகளில் (2021-22, 2022-23, 2023-24) தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை. மேலும், தேர்தல்களில் போட்டியிட்டும் தேர்தல் செலவு அறிக்கைகளைத் தாக்கல் செய்யவில்லை. இந்த கட்சிகள் நாடு முழுவதும் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை.
எந்தவொரு கட்சியும் தவறாக நீக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் (CEO) இந்த கட்சிகளுக்குக் காரண விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகு, சம்பந்தப்பட்ட CEO-க்கள் மூலம் கட்சிகளுக்கு விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்படும். CEO-க்களின் அறிக்கைகளின் அடிப்படையில், எந்த கட்சியை நீக்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.
தேர்தல் கமிஷன் நீக்கி உள்ள 474 கட்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, கோகுலம் மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட 42 கட்சிகளும் அடங்கும்.
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை திமுக சின்னத்தில் போட்டியிட்டவையாகும். இப்படி பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்போது இந்தக் கட்சிகள் உணர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியில்.. திருவாரூர் கருவாடாக காய்ந்து கிடக்கிறது.. தவெக தலைவர் விஜய்
நாகை மருந்துவமனைக்கு சென்று விஜய்யை பார்க்க சொல்லுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈழத்தமிழர்கள் நலம்.. தொண்டர்கள் கொடுத்த வேல்.. சீமானி்ன் ஆயுதங்களை கையில் தூக்கிய விஜய்!
முழுமையான அரசியல்வாதியாக மாறிய விஜய்.. நேரடித் தாக்குதல் பேச்சால் கிளம்பிய பரபரப்பு!
மும்பையில் மோனோ ரயில் சேவை நிறுத்தம்.. மக்கள் தவிப்பு ..அடுத்தடுத்து ரிப்பேர் ஆனதால் நடவடிக்கை
தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்
பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஆப்பு.. விசிக பானைக்காக போராடியது இதுக்குதான்!
2026ல் 2 கட்சிகளிடையே தான் போட்டியா?.. அதிமுக குறித்துப் பேசாத விஜய்.. மறைமுக அழைப்பா?
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
{{comments.comment}}