சென்னை: தேர்தல் ஆணைய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தமிழ்நாடு லோகச்பா தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த சதவீத அளவு 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதான் இறுதி சதவீதம் என்று ஒரு பட்டியலை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் 19ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நடந்த நிலையில் பல வாக்குச் சாவடிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் டோக்கன் கொடுத்து வாக்களிக்க வைக்கப்பட்டனர். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஒரு பட்டியல் வெளியானது. அதில் கிட்டத்தட்ட 72.09 சதவீத அளவுக்கு வாக்குப் பதிவு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இரவு 12 மணியளவில் வெளியான பட்டியலில் மாறுபட்ட வாக்குப் பதிவு விவரம் வெளியானது. அதாவது 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பெரும் பேசு பொருளானது. மாற்றி மாற்றி வந்த தகவல்களால் பலரும் குழப்பமடைந்தனர். இந்த நிலையில் இன்று இன்னொரு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 69.72 சதவீத வாக்குகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதியான வாக்கு சதவீத பட்டியல் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலின்படி தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:

திருவள்ளூர் (தனி) 68.59
வடசென்னை 60.10
தென் சென்னை 54.17
மத்திய சென்னை 53.96
ஸ்ரீபெரும்புதூர் 60.25
காஞ்சிபுரம் (தனி) 71.68
அரக்கோணம் 74.19
வேலூர் 73.53
கிருஷ்ணகிரி 71.50
தர்மபுரி 81.20
திருவண்ணாமலை 74.24
ஆரணி 75.76
விழுப்புரம் (தனி) 76.22
கள்ளக்குறிச்சி 79.21
சேலம் 78.16
நாமக்கல் 78.21
ஈரோடு 70.59
திருப்பூர் 70.62
நீலகிரி (தனி) 70.95
கோயம்புத்தூர் 64.89
பொள்ளாச்சி (தனி) 70.41
திண்டுக்கல் 71.14
கரூர் 78.60
திருச்சிராப்பள்ளி 67.51
பெரம்பலூர் 77.43
கடலூர் 72.57
சிதம்பரம் (தனி) 76.37
மயிலாடுதுறை 70.09
நாகப்பட்டினம் (தனி) 71.94
தஞ்சாவூர் 68.27
சிவகங்கை 64.26
மதுரை 62.04
தேனி 59.84
விருதுநகர் 70. 22
ராமநாதபுரம் 68.19
தூத்துக்குடி 66.88
தென்காசி (தனி) 67.65
திருநெல்வேலி 64.10
கன்னியாகுமரி 65.44
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}