- வே.தங்கப்பிரியா
சென்னை: வாட்ஸ்ஆப் போன்ற பிரபல சாட் தளங்களுக்கு போட்டியாக பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக 'X-சாட்' என்ற புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியிருப்பது எலான் மஸ்க்கின் எக்ஸ் தளமேதான்.
எலான் மஸ்க் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், X-சாட்டை எல்லாவற்றிற்கும் பயன்படுத்தும் செயலியாக உருவாக்குவது தன் இலக்கு. X-சாட் ஐ மற்ற தளங்களில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம்.
வாட்ஸ் ஆப்பில் நம் தகவல்களை அனைவரும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஆனால் X-சாட் ல் நம் தனிப்பட்ட விஷயங்களை யாராலும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க இயலாது. அதையும் மீறி யாராவது ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயன்றால் அது குறித்து அனுப்பியவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதியையும் இயக்க முடியும்.

மேலும் X-சாட் நம் தனிப்பட்ட மற்றும் குரூப் சேட்கள் "என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் "(E2EE என்றும் சொல்லலாம்) மூலம் பாதுகாக்கப்படுகிறது. X-சாட்டின் இன்னொரு சிறப்பு அம்சமாக கருதப்படுவது அனுப்புபவர் மற்றும் பெறுபவர் ஆகியோரை தவிர வேறு யாராலும் X-சாட் நிறுவனம் உட்பட நம் தகவல்களை அணுக முடியாது. வாட்ஸ் அப் நிறுவனத்திடம் நம் தகவல்கள் அனைத்தும் இருக்கும்.
வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் அனுப்பிய மெசேஜ்களை எடிட் மற்றும் நீக்கம் (டெலிட்) செய்யலாம். அதில் ஒரு மெசேஜ் நீக்கப்பட்டால் இந்த மெசேஜ் நீக்கப்பட்டது என்ற குறிப்பு வரும். ஆனால் X-சாட் ல் நீக்கப்பட்ட மெசேஜ்கள் எந்த தடயமும் இல்லாமல் முற்றிலும் மறைந்து விடும். இது ஒரூ தனிப்பட்ட பாதுகாப்பு உரிமையை அனைவருக்கும் கொடுக்கும் விதத்தில் உள்ளது.
வாட்ஸ் ஆப்பில் விளம்பரங்கள் வருவது போல X-சாட் ல் விளம்பரங்களோ, ட்ராக்கிங் செயல்பாடுகளோ இருக்காது என மஸ்க் உறுதி அளித்துள்ளார். பழைய மற்றும் புதிய X-சாட் செய்திகள் அனைத்தும் ஒரே இன்பாக்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குரல் குறிப்புகள் அனுப்பும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.X-சாட் தற்போது IOS பயனர்களுக்கும் மற்றும் வெப் வழியாகவும் X தளத்தின் DMc பிரிவில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கான வெளியீடு விரைவில் வரும் என X சாட் நிறுவனம் அறிவித்துள்ளது.
(வே. தங்கப்பிரியா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
தலைமைச் செயலகத்தில் புகுந்து போராட முயன்றது ஏன்.. அறிவு விளக்கம்
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
{{comments.comment}}