சேலம் : கட்சிக்கு துரோகம் செய்தால் இது தான் நிலைமை. கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என அதிமுக.,வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை நேற்று அறிவித்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்ததுடன் தான் மனவேதனையில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை விரைவில் வெளியிட உள்ளதாகவும் செங்கோட்டையன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததுடன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், கட்சிக்கு துரோகம் செய்தால் இது தான் நிலைமை. கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டோர் அதிமுக குறித்து பேச அருகதை இல்லை. ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கின்றனர். 2026 சட்டசபை தேர்தலில் திமுக.,வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதே இவர்களின் நோக்கம்.
திமுக.,விற்கு ஆதரவாக தான் செங்கோட்டையன் செயல்படுகிறார். பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டோருடன் இணைந்து செயல்பட்டதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இருக்கும் வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் தினகரன். கடந்த 6 மாதங்களாக கட்சிக்கு எதிராக இருந்தார் செங்கோட்டையன். திமுக.,வின் பி டீமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தார் செங்கோட்டையன் என செங்கோட்டையனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
இராதாவும் விஜியும்.. ஒரு நிமிடக் கதை (18)
காலத்தை வென்றவன்!
Teachers Are Builders of Tomorrow
அருளாட்சி புரியும் அன்னை மீனாட்சி!
{{comments.comment}}