சென்னை : தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு முதல் முறையாக தமிழகம் வரும் பிரதமரை இபிஎஸ் சந்திக்க உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, இன்று தமிழ்நாடு வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். வெளிநாடு சென்றுள்ள பிரதமர் மோடி, மாலத்தீவில் இருந்து நேரடியாக தூத்துக்குடிக்கு இன்று இரவு 7:50 மணிக்கு தனி விமானத்தில் வருகிறார். சுமார் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
தூத்துக்குடியில் ரூ.4,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் தொடங்கி வைக்கிறார். இதில் ரயில்வே துறை (ரூ.1,030 கோடி), நெடுஞ்சாலைத் துறை (ரூ. 2,571 கோடி) மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் பரிமாற்ற அமைப்பு (ரூ. 548 கோடி) போன்ற திட்டங்கள் அடங்கும். விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். தூத்துக்குடி வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தனி விமானம் மூலம் திருச்சிக்கு இரவு 10:30 மணியளவில் வந்து பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். ஜூலை 27 அன்று, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2:25 மணிக்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுகிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தமிழக முதல்வர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், தமிழக அரசு சார்பில் துணை முதல்வர், மூத்த அமைச்சர் சென்று பிரதமர் மோடியை வரவேற்க வாய்ப்புள்ளது. அவர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தமிழகம் வரும் பிரதமரை வரவேற்கவும், வழியனுப்பவும் தனக்கு அனுமதி அளிக்கும் படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவருக்கு அனமதி மறுக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}