சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜனவரி 11ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும், 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான போட்டி தர வேண்டும் என்று திமுக விரும்பினால் அக்கட்சியே தனது வேட்பாளரை நிறுத்தவும் வாய்ப்புண்டு.

மறுபக்கம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் அதிமுக இங்கு போட்டியிடாமல் தனது கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இதை ஒதுக்கியது. பின்னர் நடந்த இடைத் தேர்தலில் அதிமுகவே போட்டியிட்டு படு தோல்வியைத் தழுவியது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த முறை அதிமுக மீண்டும் போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்வி எழ முக்கியக் காரணம், விக்கிரவாண்டி இடைத் தேர்தல்தான். கடந்த வருடம் நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்தது. அதேபோல பாஜகவும் போட்டியிடாமல் ஒதுங்கியது. அதற்குப் பதிலாக பாமகவும், நாம் தமிழர் கட்சியும் போட்டியிட்டன. இந்த இரு கட்சிகளும் அதிமுக வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக திமுக அத்தனை வாக்குகளையும் மொத்தமாக வாரிச் சுருட்டி அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது. மேலும் இத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக புறக்கணித்தது பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது.
இந்த நிலையில்தான் தற்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வந்துள்ளது. இதில் கட்டாயம் நாம் போட்டியிட்டாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஈரோடு அதிமுகவினர் உள்ளனர். இதுதொடர்பாக கட்சித் தலைமையிடமும் அவர்கள் வலியுறுத்த ஆரம்பித்து விட்டனராம். இந்த நிலையில்தான் ஜனவரி 11ம் தேதி சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டியுள்ளார். அப்போது இடைத் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
இணையத்தில் செம டிரெண்டிங்.. பரபரக்கும் ‘You+Me - Against the World’ திரைப்பட கிளைமேக்ஸ்!
From Devotion to the stage.. Niranjanaa's Bharatanatyam Arangetram
Poem on Life: வாழ்க்கை!
{{comments.comment}}