பெங்களூர்: கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணா (92) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவின் மூத்த அரசியல் தலைவராக திகழ்ந்தவரும், முன்னாள் முதல்வருமா எம் எஸ் கிருஷ்ணா பெங்களூரை சிறந்த தொழில்நுட்ப நகரமாக மாற்ற தனது முக்கிய பங்களிப்பை கொடுத்தவர். இவரது ஆட்சிக்காலத்தில்தான் ஹைடெக் நகராக பெங்களூர் மாறி ஐடி துறையில் இந்தியாவின் தலைநகராக உருவெடுத்தது. கடந்த 1999 முதல் 2004 இந்த வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தார். அந்த சமயத்தில்தான் சந்தன கடத்தல் வீரப்பன் கர்நாடகா சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமாரை கடத்திய சம்பவம் நடந்தேறியது.

முதல்வராக, மத்திய அமைச்சராக பல்வேறு பதவிகளை வகித்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா பின்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு மத்திய பாஜக அரசு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கெளரவித்துள்ளது.
பெங்களூரில் வசித்து வந்த முன்னாள் முதல்வர் எம் எஸ் கிருஷ்ணாவுக்கு தற்போது வயது 92. கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனளிக்காததால் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தனது வீட்டிலேயே இயற்கை எய்தினார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}