டெல்லி: அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிதல்ல. ஏற்கனவே நடந்துள்ளதுதான். மேலும் அவர்கள் நாட்டு சட்டப்படியே கைவிலங்கிட்டு அழைத்து வந்துள்ளனர். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு கைவிலங்கு போடப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு கொண்டு வரப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதைக் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூகம்பமாக வெடித்தது. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு பிற்பகலில் அமைச்சர் ஜெய்சங்கர் ராஜ்யசபாவில் ஒரு விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் இந்தியர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படக் கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்துடன் மத்திய அரசு பேசி வருகிறது. நேற்றைய சம்பவத்தில் ஆண்கள் மட்டுமே கைவிலங்கிடப்பட்டது தெரிய வந்துள்ளது. அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு அப்படிப் போடப்படவில்லை.
அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை சார்பில் நாடு கடத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது வழக்கமாக நடைபெறுவதுதான். விமானம் மூலமாக சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறது அமெரிக்கா. கடந்த 2012ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. அவர்கள் நாட்டுச் சட்டப்படி கைவிலங்கிடுகிறார்கள். அதேசமயம், பெண்கள், குழந்தைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு பயண நேரமான 10 மணி நேரமும் உரிய உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. டாய்லெட் செல்ல விரும்புவோருக்கு அந்த சமயத்தில் கைவிலங்குகள் தளர்த்தப்பட்டுள்ளன. ராணுவ விமானத்தில் கொண்டு வரப்பட்டதால் மட்டுமல்ல, சாதாரண சிவில் விமானங்களில் அழைத்து வரப்பட்டாலும் கூட இதே விதிமுறைகளைத்தான் அமெரிக்கா கையாளுகிறது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}