மிச்சாங் புயலின் "கண்" நம்மை நோக்கி.. நமக்குப் பக்கத்தில்.. அதனால்தான் பெருமழை..!

Dec 04, 2023,04:41 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: மிச்சாங் புயலின் கண் பகுதி சென்னைக்கு அருகே இருப்பதால்தான் பெருமழை பெய்து வருவதாகவும், அதனால்தான் இது கடந்து செல்ல இரவு நேரம் வரை ஆகும் எனவும் கூறப்படுகிறது.


வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது ஆந்திராவில் கரையைக் கடக்கும் போது அதிதீவிரப் புயலாக வலுப்பெறும். அப்போது மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று  வீச கூடும். மிச்சாங் புயல் நாளை நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் .


இந்நிலையில் புயலின் கண் பகுதி சென்னைக்கு அருகே இருப்பதால்தான் பெருமழை பெய்து வருவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மிச்சாங் புயல் சென்னையை கடந்து செல்ல இரவு வரையாகும். இந்த புயல் நெல்லூர் பகுதியை கடந்த பின்னரே சென்னைக்கும் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளன.




இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ,ஆகிய மாவட்டங்களில் ஒரே மாதிரியான கனமழையை எதிர்ப்பார்க்கலாம் . மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ஆற்று நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இயல்பை விட 29 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ள நிலையில், இன்னும் 45 சதவீதம் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையே, மணி 4ஐத் தாண்டியும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்னும் மழை விடவில்லை. நேற்று இரவு ஆரம்பித்த மழை இது. வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை பெய்து வருவதால் சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். 


நாராயணபுரம் ஏரி உடைந்தது


சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நாராயணபுரம் ஏரி நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் பள்ளிக்கரணை பகுதி குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கடல் போல் காட்சி அளிக்கின்றது. இதனால் அடுக்குமாடி பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களின் பல கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. 


ஏரியையை ஒட்டி உள்ள பூர்வங்கரா என்ற அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் நீரில் மூழ்கியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.


தண்ணீர் வெள்ளம் போல சூழ்ந்து நிற்பதால் பாம்பு, பூரான் போன்ற ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் எச்சரித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!

news

திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்

news

பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்