அச்சச்சோ.. அருண் விஜய் கைக்கும் காலுக்கும் என்னாச்சு?... பதறிப் போன ரசிகர்கள்!

Jan 17, 2024,06:36 PM IST

சென்னை: நடிகர் அருண் விஜய் கடந்த சில நாட்களாக கையில் கட்டுடன் வலம் வந்து கொண்டிருப்பதால் அவருடைய கைக்கும் காலுக்கும் என்ன ஆச்சு என ரசிகர்கள் மிகவும் அக்கறையுடன் விசாரித்து வருகின்றனர். 


தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய். ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்காத போதும், ஸ்மார்டான வில்லனாக கம்பேக் கொடுத்து, தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் அருண் விஜய். இவர் இனி வில்லனாக தான் நடிக்க போகிறாரோ என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தனது டிராக்கை மாற்றி அதிரடி ஆக்ஷன் படங்களில் கலக்கி வருகிறார். மீண்டும் ஹீரோ டிராக்கிற்கு திரும்பிய அருண் விஜய் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது.




படங்களில் நடிப்பதுடன் சோஷியல் மீடியாவிலும் படுபிஸியாக இருந்து வருகிறார் அருண் விஜய். பட அப்டேட்கள், திருவண்ணாமலை கிரிவலம், வீட்டில் நடக்கும் விசேஷங்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவது, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது என தன்னை பற்றிய அப்டேட்களை சோஷயில் மீடியா பக்கங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் அருண் விஜய். டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் குமார் நடித்த " Mission : chapter 1" படம் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்த பட ரிலீசிற்கு முன்பிருந்தே அருண் விஜய் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள போட்டோக்களில் அவரது வலது கை மற்றும் வலது காலில் கட்டுப்போட்டது போல் காட்சி அளித்து வருகிறார். சமீபத்தில்  " Mission : chapter 1" பட வெளியீட்டு விழா, ஈஷா மையத்தில் ஆதியோகி தரிசனம் போன்ற பல போட்டோக்களில் கையில் கட்டுப்போட்ட நிலையில், வலது காலில் கருப்பு பேண்டேஜ் போட்டது போலவும் இருந்தார். அதே சமயம் 2 நாட்களுக்கு முன் வீட்டில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய போட்டோவில் கையில் கட்டு இல்லாமல் வழக்கம் போல் பட்டு வேட்டி சட்டையில் இருந்தது போல் போஸ் கொடுத்திருந்தார். இதனால் அவருக்கு காயம் சரியாகி விட்டது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


ஆனால் இன்று அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண வந்த அருண் விஜய், முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் டைரக்டர் ஏ.எல்.விஜய்யும் சென்றிருந்தார். இவர்கள் இருவரும் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு எடுத்துக் கொண்ட போட்டோவிலும், ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு வந்த போதும் அருண் விஜய் மீண்டும் கை மற்றும் காலில் பேண்டேஜ் உடன் இருந்தார். இதனால் ரசிகர்கள் பலர் இவரின் கைக்கும், காலுக்கும் என்னாச்சு என அக்கறையுடன் விசாரித்து வருகின்றனர்.


ரசிகர்கள் பலர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் இது பற்றி கேட்டு விட்டார்கள். ஆனால் இதுவரை அருண்விஜய் தரப்பில் அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.


சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்