சென்னை: 2024-2025-ம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்குத்தொகையான ரூ. 944.80 கோடியைத் தான் மத்திய அரசு தற்போது விடுவித்துள்ளது. இந்தத் தொகையானது கடந்த ஜூன் மாதத்திலேயே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியது. காலம் தாழ்த்தப்பட்டு தற்போது தான் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நேற்று தமிழ்நாட்டுக்கு ரூ. 944.80 கோடி புயல் நிவாரண நிதியை விடுவிப்பதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து தற்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள விளக்கம்:
ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்கு தொகை ரூ. 944 கோடியை விடுவித்துள்ளது. இந்த நிதியானது 15-வது நிதிக்குழு பரிந்துரையின் படி, அனைத்து மாநிலங்களுக்கும் சட்டப்படியாக விடுவிக்க வேண்டிய நிதி. அதன் அடிப்படையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்குத்தொகை 2021-2022-ம் ஆண்டில் ரூ.816 கோடியும், 2022 - 2023-ம் ஆண்டில் ரூ. 856 கோடியும், 2023- 2024-ம் ஆண்டில் ரூ.900 கோடியை விடுவித்துள்ளது.
2024-2025-ம் ஆண்டிற்கான மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான தனது பங்குத்தொகையான ரூ. 944.80 கோடியைத் தான் ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ளது. இந்தத் தொகையானது கடந்த ஜூன் மாதத்திலேயே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டியது. காலம் தாழ்த்தப்பட்டு தற்போது தான் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாநிலங்களில் பெய்த அதி கனமழை காரணமாக ஏற்பட்ட பேரிடர்களுக்கான நிவாரண நிதியாக மாநில அரசுக்கு ரூ. 37,906 கோடி தர ஒன்றிய அரசை வலியுறுத்தியிருந்தோம். ஆனால், ஒன்றிய அரசிடம் இருந்து நாம் பெற்றது அதில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான தொகைதான். அதாவது, ரூ.276 கோடி மட்டுமே.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 14 மாவட்ட மக்களின் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஒன்றிய அரசு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 6,675 கோடியை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ள மாநில பேரிடர் நிவாரண நிதித் தொகையை ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகத் தவறான பிம்பம் பரப்பப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான பங்குத்தொகையை தவிர, கடந்த மூன்றாண்டுகளில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நாம் பெற்றது ரூ.276 கோடி மட்டுமே!
எனவே ஒன்றிய அரசு, துயர் சூழ்ந்த இந்த வேளையில் தமிழ் நாட்டு மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிவாரணத் தொகையினை வழங்கிட வேண்டுமெனக் கோருகின்றேன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}