கலைவாணி கோபால்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரகுமான் 17 ஆண்டுகளுக்கு பின்னர் தனது தாய்நாடு திரும்பியுள்ளார்.
வங்கதேசம் தொடர்ந்து வன்முறைக்காலமாக மாறிய வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வங்கதேசத்தின் மாணவ அமைப்பின் தலைவர் செரிப் உஸ்மான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு இந்துக்களுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஆன காலிதா ஜியாவின் மகன் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயகமான வங்கதேசத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
பிரதமர் ஷேக் அசினா கொலை செய்ய முயன்றதாகவும், பல்வேறுகள் மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவரின் பேரில் நிறைய வழக்குகள் போடப்பட்டு அவர் சில காலம் லண்டனில் தஞ்சம்மடைந்து இருந்தார். தற்போது வங்கதேசத்தில் நடக்கும் வன்முறை சூழலில், அவர் 17 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பியது தேர்தல் காலத்தில் திருப்புமுனையாக இருக்கும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் எவர் கேர் மருத்துவமனையில் உள்ள அவருடைய தாயை சந்தித்த பிறகு, அவருடைய அரசியல் கருத்துக்களை மக்களிடம் பதிவு செய்துள்ளார், அதில் கூறப்பட்டிருப்பதாவது, வங்கதேசமானது கிறிஸ்தவர்கள், இந்தியர்கள், முஸ்லிம்கள் , பௌத்தர்கள் என அனைவருக்கும் சொந்தமானது. அது மட்டுமல்லாமல் வங்கதேச மக்களிடம் ஒழுக்கம் மட்டும் கட்டுப்பாடுகளை கொண்டு வர முயல்வேன் என்றும் ஒவ்வொரு பெண்ணும் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை அவருடைய குடும்பமும் அவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 27 ஆம் தேதி அவர் தனது வாக்காளர் அடையாளத்தை பதிவு செய்வார் என்றும், பிப்ரவரி 12 நடக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாரிக் ரகுமானின் கருத்துக்களும், அவரின் பேச்சும் மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் திசை திருப்பத்தையும் தந்துள்ளது.
(கலைவாணி கோபால் தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல நகத்திலும் உண்டு!
கலாம் என்றொரு ஆளுமை.. I miss you Kalam...!
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
இயற்கை!
2026ம் ஆண்டு யாருக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான விரிவான ராசிப்பலன்
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
{{comments.comment}}