91 வயதில் வந்த "க்யூட் காதல்".. மனம் திறக்கும் டிஎல்எப் தலைவர் குஷால் பால் சிங்!

Feb 28, 2023,03:13 PM IST
டெல்லி: டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங் காதல் வயப்பட்டுள்ளாராம். விசேஷம் என்னவென்றால் அவருக்கு தற்போது 91 வயதாகிறது. தனது காதலும், காதலியும் தன்னை வெகுவாக உற்சாகமாக வைத்துக் கொள்கிறார்கள் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் குஷால் பால் சிங்.



குஷால் பால் சிங்கின் மனைவி கடந்த 2018ம் ஆண்டு மரணமடைந்தார். இந்த நிலையில் மீண்டும் ஒரு மலர்ச்சி அவரது வாழ்க்கையில் வந்துள்ளது.   இதுதொடர்பாக சிஎன்பிசி டி18 நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் குஷால் பால் சிங்.

இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் குஷால் பால் சிங்குக்கும் தனி இடம் உண்டு. ஸ்போர்ட்ஸ்மேனாக வலம் வந்த இவர் பின்னர் கட்டுமானத் தொழிலில் இறங்கினார். ரியல் எஸ்ட்டே பிரிவில் புதிய புரட்சியை உண்டு பண்ணிய நிறுவனம் டிஎல்எப். குருகிராம் நகரின் வடிவமைப்புக்கும் இவரே முக்கியக் காரணம் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎன்பிசி - டிவி18 நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் குஷால் பால் சிங் கூறியிருப்பதாவது:

ஒரு அழகான பெண்ணை நான் சந்தித்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இப்போது அவர் எனது பார்ட்னரும் கூட. அவரது பெயர் ஷீனா.  எனது வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர். மிகவும் சுறுசுறுப்பானவர், எனர்ஜியானவர். எப்போதும் என்னை உற்சாகமாக வைத்துக் கொள்கிறார். உலகம் முழுவதும் அவருக்கு அருமையான நண்பர்கள் உள்ளனர்.

எனது மனைவி இறந்தபோது எனக்கு மிகப் பெரிய ஆறுதல் கூறியவர் ஷீனா. வாழ்க்கை வாழ்வதற்காகவே.. அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும். பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்று கூறியவர் ஷீனாதான்.

எனது திருமண வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியானது. எனது மனைவி எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எங்களுடைய மனப் பொருத்தம் மிக மிக அருமையாக இருந்தது. எங்களால் முடிந்த சிறந்ததை வாழ்க்கையில் கண்டோம். ஆனால் அவர் என்னை விட்டுப் போனபோது நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்.

65 ஆண்டுகள் என்னுடன் வாழ்க்கையில் பயணித்து விட்டு அவர் போனபோது நமது வாழ்க்கை ஒரே போல இருக்க முடியாது. எனவே எனது ஆக்டிவான வாழ்க்கையிலிருந்து விலக ஆரம்பித்தேன். இப்போதுதான் மீண்டு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார் குஷால் பால் சிங்.

குஷால் பால் சிங்கின் சொத்து மதிப்பு போர்ப்ஸ் கணக்குப்படி 8.81 பில்லியன் டாலர் ஆகும். ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றிய குஷால் பால் சிங் 1961ம் ஆண்டு ராணுவத்திலிருந்து விலகி டிஎல்எப் நிறுவனத்தில் சேர்ந்தார். இது அவரது மாமனார் 1946ம் ஆண்டு உருவாக்கிய நிறுவனமாகும். 

டெல்லியின் புறநகரான குர்கான் (குருகிராம்) பகுதியில் டிஎல்எப் சிட்டியை உருவாக்கி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார்.  விவசாயிகளிடமிருந்து பெற்ற நிலங்களில் இந்த நகரம் அமைந்துள்ளது. தற்போது டிஎல்எப் நிறுவனத்தை, குஷாலின் மகன் ராஜீவ்தான் தலைமைப் பொறுப்பில்இருந்து பார்த்துக் கொள்கிறார். 50 ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய நிலையில் 2020ம் ஆண்டு தலைமைப் பொறுப்பிலிருந்து குஷால் பால் சிங் விலகினார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!

news

முன்னாள் புயல் டிட்வா.. இன்னும் சில நாட்கள் கடலோரமாகவே சுத்திருட்டிருக்குமாம்.. மழை நீடிக்கும்!

news

டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு

news

அரசியல் சாசனத்தின் மீது ஆணையாக.. வித்தியாசமான உறுதிமொழி எடுத்து திருமணம்!

news

நடிகை சமந்தா ரகசிய திருமணம்...இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைக்கு பஞ்சமே இல்லை... உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை: அன்புமணி

news

கிளைமேட்டே மாறிப் போச்சு.. ஓவரா வேற குளிருது.. சூடா கற்பூரவல்லி இஞ்சி டீ குடிப்போமா?

news

சுயநலவாதி...துரோகி...கோபியில் செங்கோட்டையனை சரமாரியாக விமர்சித்த இபிஎஸ்

news

குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது...எதிர்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

அதிகம் பார்க்கும் செய்திகள்