டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் நிகாம்போத் காட் பகுதியில் நடந்த இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் ஏழு நாள் தூக்கம் அனுசரி படுகிறது. அதேபோல் காங்கிரஸ் சார்பிலும் ஏழு நாட்கள் அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இன்று மன்மோகன் சிங் உடல் காலை அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக மன்மோகன் சிங் உடல் உடல் தகனம் நடைபெறவுள்ள நிகாம்போத் காட் பகுதிக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தியும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்ற பொருளாதார பிதாமகருக்கு நாடு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}