மதுரை: அண்ணாமலை இல்லாமல் தமிழநாடு அமைதியாக இருக்கிறது. அவரை எப்படி அனுப்புவது என்று தலைமை தவித்துக்கொண்டிருக்கிறது போல என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அவர் பேசுகையில், பாஜக மாநில தலைவரை எப்படி அனுப்புவது என்று தலைமை தவித்துக்கொண்டிருக்கிறது போல. இப்பொழுது தமிழநாடு அமைதியாக இருக்கிறது போன்று தெரிகிறது. தமிழக பாஜகவில் தற்போது பொறுப்பேற்றுள்ளவர் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். இது உண்மையில் பாஜக தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று எல்லோரும் பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் பிரச்சனை கல்விக்கு கூட நிதி வாங்க முடியாத கையாலாகாத நிலைமை நாம் பார்க்கிறோம். அதற்கு நிபந்தனைகள் விதிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரும் கடிதம் எழுதி இருக்கிறார். ஆனால், மத்தியில் இருக்கும் அரசு தருவதாக தெரியவில்லை. நேற்று கூட கல்வி அமைச்சர் இதில் அரசியல் சாயம் பூசக்கூடாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.
எது எப்படி இருந்தாலும் மாணவர்களுக்கு நிதி இல்லாமல் கல்வி கற்கக்கூடிய புனிதப் பணி தடைப்பட்டு விடக்கூடாது. மத்தியில் ஆளுகின்ற கட்சி மாநிலத்திலும் ஆளுகின்ற கட்சி இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பழி சுமத்திக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களின் பள்ளி கல்வித்துறைக்கும் இன்னும் முடிவு கிடைக்கவில்லை. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி கவலையோடு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
{{comments.comment}}