சென்னை: சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தணை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 11ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜி காவல் 24வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யும் போதே செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கோர்ட் உத்தரவின்படி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு அவருடைய உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் பல முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி. அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் தனது அமைச்சர் பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்தார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று அவர் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்நிலையில், நீதிபதி அல்லி அவரது காவலை மார்ச் 11ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தல் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படியே சென்றால் செந்தில் பாலாஜியின் நிலைமை என்னாகுமோ தெரியவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கவலை தெரிவிந்துள்ளனர்.
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
{{comments.comment}}