100 நாள் வேலைத்திட்டம்.. தகவல் அறியும் உரிமை சட்டம் .. வரலாறு படைத்த நாயகன் மன்மோகன் சிங்!

Dec 26, 2024,11:37 PM IST

டில்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணமடைந்துள்ளார்.  நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பியாக அறியப்பட்டவர் டாக்டர் மன்மோகன் சிங்


பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய குடும்பத்தில் 1932 ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி பிறந்த மன்மோகன் சிங், இளம் வயதிலேயே தாயை இழந்தவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் குடியேறிய இவர், இந்துக் கல்லூரியில் பயின்றார். இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். 


லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1957ம் ஆண்டு பொருளாதாரத்தில் first class honours பட்டம் பெற்ற மன்மோகன் சிங், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் மூத்த விரிவுரையாளராகவும், வாசிப்பாளராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். பொருளாதாரத்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் D.Phil பட்டம் பெற்ற இவர் டில்லி பல்கலைக்கழகத்தின் பொருளாதார பள்ளியில் அனைத்துலக வர்த்தகத்துறையின் பேராசிரியராகவும், கெளரவ பேராசிரியராகவும் இருந்துள்ளார்.




1971 ம் ஆண்டு இந்திய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக பணியில் சேர்ந்த இவர், 1976 முதல் 1980 வரை இந்திய ரிசர்வ் வங்கியில் இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதோடு கூடுதலாக இந்திய தொழில் மேம்பாட்டு இயக்குநர் பணியையும் வகித்து வந்தார். 1977-1980 ல் மத்திய நிதியமைச்சகத்தில் பொருளாதார அலுவல் பிரிவு செயலராகவும், 1982-1985 வரை ரிசர்வ் வங்கி கவர்னராகவும் இருந்தார். 1985- 1987 வரை இந்திய திட்ட கமிஷன் துணை தலைவராக இருந்தார். இவரின் பொருளாதார நிபுணத்துவம் கண்டு 1990-1991 முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆட்சி காலத்தில் பிரதமரின் ஆலோசகராக இடம்பிடித்தார். 


1991 முதல் 1996 வரை பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராகவும், நாடாளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற போது மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு அதிக காலம் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றார். இந்து மதத்தை சேராத முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றவர் மன்மோகன் சிங். முதல் சீக்கிய பிரதமராக பதவியேற்ற மன்மோகன் சிங்கிற்கு, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


கல்வித்துறையிலும், அரசியலிலும் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த மேதையாக திகழ்ந்தவர் மன்மோகன் சிங். இவர் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவிற்கு உயர்ந்தது. சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. 1999ல் லோக்சபா தேர்தலில் தெற்கு டில்லியில் போட்டியிட்ட இவர், தோல்வியை சந்தித்தார்.  பிறகு அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 


மன்மோகன் சிங் சாதனைகளும், திட்டங்களும் :


* மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவின் ஜிடிபி 8.5 சதவீதமாக உயர்ந்தது.


* தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டம் ஆகியவை மன்மோகன் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை.


* நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றாலும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கல்வி உரிமை சட்டத்தில் முக்கிய அம்சமாக கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்.


* உணவு பாதுகாப்பு சட்டம், லோக்பால் அமைப்பு சட்டங்கள், மகளிருக்கு எதிரான வன்முறை செயல்களை தடுக்கும் சட்டம், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடை செய்யும் சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்.


* 100 நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!

news

என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்

news

அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

news

ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

news

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!

news

தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்

news

மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!

news

இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!

news

சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!

அதிகம் பார்க்கும் செய்திகள்