டில்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் இன்று காலமானார். அவருக்கு வயது 92. இவரது மறைவை அடுத்து காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலரும் டில்லி விரைந்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் அவருக்கு ஐசியு.,வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. டாக்டர்கள் குழு அவருக்கு பல விதமான மருத்துவ பரிசோதனைகள் எடுத்து, சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக சொல்லப்பட்டது.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். பாஜக தேசிய தலைவர் நட்டாவும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தார். தலைவர்கள் வருகையை அடுத்து எய்ம் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்பட்டது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மன்மோகன் சிங் உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டில்லி விரைந்து வருகின்றனர்.
இந்தியாவின் 14வது பிரதமராக பதவியேற்ற மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியை வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தகவல் அறியும் உரிமை சட்டம், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதி திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும்.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் ஆட்சி காலத்தில் மத்திய நிதியமைச்சராகவும் மன்மோகன் சிங் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. தலைமை பொருளாதார ஆலோசகர், ஆர்பிஐ கவர்னர், திட்ட கமிஷன் துணை தலைவர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்து, பொருளாதார மேதை என அனைவராலும் புகழப்பட்டவர் மன்மோகன் சிங்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
{{comments.comment}}