வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!

Jan 15, 2026,05:51 PM IST

- கு. கவிதா


பொங்கும் இப்பொங்கல் திருநாளில் 

இன்பம் பொங்கட்டும்.

தமிழ் மொழியின் நறுமணம் 

உலகெங்கும் வீசட்டும், 

பாலும் தேனும் 

ஆறு கலந்து பெருகட்டும். 

ஒற்றுமை என்னும் பேராறு 

மனமெங்கும் பாய்ந்தோடட்டும். 

நன்நெறியுடன் நட்பும் நமதாகட்டும். 




மாவிலைக் கோலத்துடன்  

குதூகலிக்கும்  வண்ணங்கள்,

பச்சரிசி சோற்றுடன் சேரும் பல்வகைக் காய்கறிகள், 

வாழ்த்துகளுடன் சூரிய பகவானின் வானவில் நிறங்கள், 

வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள். 

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்