
புத்திலிபாய் புதல்வனாய்
போர்பந்தரின் பொக்கிஷமாய்
பாரிசில் பட்டம் பெற்று
பாரதத்தைப் பாங்காய் அமைத்து
வந்தே மாதரம் என முழங்கி
வந்த வெள்ளையனை விரட்டியடித்து
கஸ்தூரி பாய்
கரம் பிடித்து
கஷ்டங்கள் யாவையும்
களைந்தெடுத்து
அகிம்சை ஆடையை மேலணிந்து
இம்சைத் தோலின் இடர்களைந்து
எளிமையின் அழகாய் உருமாறி
ஏழையின் அன்பில் கருவாகி
எதிரியையும் நண்பனாய் நோக்கி
அகிம்சையை மட்டுமே ஆயுதமாக்கி
சட்டையும் துறந்து
சமத்துவம் கொண்டு
நித்தமும் இந்தியன் என்ற
நிதர்சன கௌரவம் கொண்டு
சத்தியமேவ ஜெயதே என்று
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் செய்து
கதராடை உடுத்தி காட்சி தந்து
கடைக்கோடி இந்தியனுக்கும்
மாட்சி தந்து
எளிய வாழ்வு வாழ்ந்து
ஏற்றம் கண்டு
என்றென்றும் எங்கள் மனதில் வசிக்கும் மகாத்மாவே!
அகிலத்தில் உயர்ந்து
தேசத்திற்குத் தந்தையாகிப்
பணத்தில் தலைபதித்து
பாரதத்தில்
மகாத்மாவான உம்மை
வணங்கிப் போற்றிடுவோம்!
ஜெய்ஹிந்த்!
இனிய
காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!
{{comments.comment}}